பாகிஸ்தானின் மாகாணமான பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள காவல்துறை தலமையகத்தின் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 4 போலீஸ் உட்பட 11 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.
வெடி குண்டு தாக்குதளில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடப்பதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு ஈரான் வழியாக சென்றதாக குல்பூஷன் யாதவ் என்ற இந்தியரை கடந்த ஆண்டு பாகிஸ்தான் கைது செய்தது.
இவர் இந்திய உளவாளி எனவும், இந்திய கடற்படையில் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி என்றும் பாகிஸ்தான் கூறி குல்பூஷன்யாதவ் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றதை ஒப்புக்கொண்ட இந்தியா, ’ரா’ உளவு அமைப்புக்காக உளவு பார்த்தவர் என்பதை ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்நிலையில், குல்பூஷன் யாதவிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவினுள்ள போலீஸ் பயிற்சி முகாமில் புகுந்த பயங்கரவாதிகள் சுமார் 200 பயிற்சி போலீசாரை சிறைப்பிடித்தனர். மேலும் 6௦-க்கு மேற்பட்ட பயிற்சி போலீசார் பலியாயினர்.
பலுசிஸ்தான் போராட்ட குழுவின் தலைவருக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
பலுசிஸ்தான் புக்டிக்கும், அவரது குழுவினருக்கும் குடியுரிமை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலுசிஸ்தான் தலைவர் பிரஹூம்தாக் புக்டி, இந்திய அதிகாரிகளுடன் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார்.
புக்டி தவிர அவரது நம்பிக்கைக்கு உரியவர்களான ஷெர் முகமது புக்டி மற்றும் அஜிஜூல்லா புக்டி ஆகியோருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.
ஐ.நா., மனித உரிமை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் 33-வது ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.வின் நிரந்தர தூதர் அஜித்குமார் பேசுகையில்:- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் கலவரத்தின் பின்னணியில், பாகிஸ்தானிலிருந்து தூண்டி விடப்படும் பயங்கரவாதமே காரணம்.
பாகிஸ்தானுக்கு எதிராக பலுசிஸ்தானை சேர்ந்த மக்கள் நேற்று பல போராட்டம் நடத்தினர். இவர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பலுசிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலுசிஸ்தானை விட்டு சீனா வெளியேற வேண்டும் எனவும், பாகிஸ்தானும் சீனாவும் பலுசிஸ்தான் மக்களை சுயநலத்திற்காக பயன்படுத்துவதாகவும், எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதி தாது வளம் மிகுந்தது. இருந்தாலும் அங்கு வளர்ச்சி எதுவும் இன்றி மிகவும் பின் தங்கியுள்ளது. அப்பகுதியை பாகிஸ்தான் அரசு வளர்ச்சி அடைய விடாமல் தடுத்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. எனவே தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என அப்பகுதிமக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை பாகிஸ்தான் அரசு அடக்கி ஒடுக்கி வருகிறது. பல தலைவர்களை நாடு கடத்தியுள்ளது.
சுதந்திர தின விழா உரையில் பாகிஸ்தானுக்கு கடுமையான தாக்குதலை கொடுத்த பிரதமர் மோடி ”பாகிஸ்தானை பயங்கரவாதம் ஊக்குவிக்கிறது,” என்று கூறிஉள்ளார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
பலுசிஸ்தான் தலைநகர் குயிட்டாவில் பார் கவுன்சில் தலைவர், வழக்கறிஞர் பிலால் அன்வர் காசி இன்று காலை மர்மநபர்களால் தாக்கப்பட்டார். மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அன்வர் காசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள் மற்றும் போலீசார் சென்றபோது பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததில் வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், போலீசார் என அங்கியிருந்தவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.