Bank Holidays: ஜனவரி இரண்டாம் பாதியில் 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது: முழு பட்டியல் இதோ

பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் இந்தியாவில் உள்ள பிராந்திய வங்கிகள் ஆகியவை குறிப்பிட்ட தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என்று RBI வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் தெளிவாகக் கூறுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2022, 10:31 AM IST
Bank Holidays: ஜனவரி இரண்டாம் பாதியில் 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது: முழு பட்டியல் இதோ  title=

Bank Holidays in January 2022: அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகளும் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி 2022 இன் இரண்டாம் பாதியில் மொத்தம் 5 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், இந்த விடுமுறை நாட்களை மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும். 

பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் இந்தியாவில் உள்ள பிராந்திய வங்கிகள் ஆகியவை குறிப்பிட்ட தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் தெளிவாகக் கூறுகின்றன. 

RBI இந்த பின்வரும் வகைகளின் கீழ் கடன் வழங்குபவர்களுக்கு விடுமுறையை அறிவித்தது. நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் சட்டம், விடுமுறை, ரியல் டைம் க்ராஸ் செட்டில்மெண்ட் விடுமுறை மற்றும் வங்கிகளின் கணக்குகளை மூடுதல் ஆகியவை இந்த வகைகளாகும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் வங்கி (Bank) விடுமுறைகள் மாறுபட்டு இருக்கும். இருப்பினும், இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் சில நாட்களும் உள்ளன. அவற்றுள் குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) ஆகியவையும் அடங்கும். 

தமிழகத்தைப் பொறுத்த வரை ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்காக சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருந்த நிலையில், மீண்டும் வரவிருக்கும் வங்கி விடுமுறைகளை கருத்தில் கொண்டு மக்கள் தங்கள் வங்கிப் பணிகளை திட்டமிடுவது நல்லது.

ALSO READ | Budget 2022 எதிர்பார்ப்புகள்: நேரடி வரிகளில் சலுகைகள், சுங்கவரியில் நிவாரணம்!! 

ரிசர்வ் வங்கியின் (ஜனவரி 19 முதல்) பட்டியலின்படி, உங்கள் நகரத்தில், ஜனவரி 2022 இன் மீதமுள்ள நாட்களில் வங்கி விடுமுறை நாட்களின் முழுப் பட்டியல் இதோ.

ஜனவரி 22, 2022 - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை

ஜனவரி 23, 2022 - ஞாயிறு

ஜனவரி 26, 2022 - குடியரசு தினம் (Republic Day) (இம்பால், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், போபால், புவனேஷ்வர், சண்டிகர் மற்றும் அகர்தலா தவிர இந்தியா முழுவதும்).

ஜனவரி 30, 2022 - ஞாயிறு.

ALSO READ | Budget 2022: சாமானியர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள்: நிறைவேற்றுமா அரசு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News