CoWIN தளத்தில் இனி 14 பிராந்திய மொழிகளில் தகவல் பெறலாம்: தமிழிலும் கிடைக்குமா தகவல்?

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் தலைமையில் திங்களன்று நடைபெற்ற கோவிட் -19 உயர் மட்ட அமைச்சரவைக் குழுவின் 26 வது கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 17, 2021, 10:30 PM IST
  • இந்தி மற்றும் 14 பிராந்திய மொழிகளில் கோவின் போர்ட்டலில் (CoWIN) தகவல்கள் கிடைக்கும்.
  • தொற்றின் மாறுபாடுகளைக் கண்காணிக்க மேலும் 17 ஆய்வகங்கள் இந்த பணியில் சேர்க்கப்படும்.
  • 26 நாட்களுக்குப் பிறகு முதல்முறையாக, கொரோனா தொற்றின் ஒரு நாள் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்குக் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
CoWIN தளத்தில் இனி 14 பிராந்திய மொழிகளில் தகவல் பெறலாம்: தமிழிலும் கிடைக்குமா தகவல்?   title=

புதுடில்லி: அடுத்த வாரம் முதல் இந்தி மற்றும் 14 பிராந்திய மொழிகளில் கோவின் போர்ட்டலில் (CoWIN) தகவல்கள் கிடைக்கும், மேலும் கோவிட் -19 மாறுபாடுகளைக் கண்காணிக்க மேலும் 17 ஆய்வகங்கள் இந்த பணியில் சேர்க்கப்படும். 

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் தலைமையில் திங்களன்று நடைபெற்ற கோவிட் -19 உயர் மட்ட அமைச்சரவைக் குழுவின் (ஜிஓஎம்) 26 வது கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பிராந்திய மொழிகளில் கோவின் போர்டலில் தகவல்கள்
மக்களுக்கு வசதியாக இருக்க, கோவின் (CoWIN) தளத்தில் இந்தி மற்றும் 14 பிராந்திய மொழிகளில் தகவல்கள் அளிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்த புதுப்பிப்பு, தளத்தில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 மொழிகளில் கண்டிப்பாக தமிழும் இருக்கும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்த 14 மொழிகளில் எந்தெந்த மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன என இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வரவில்லை.

பரிசோதனைகளை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது

மாதிரிகளின் பரிசோதனையை மேம்படுத்துவதற்காக இன்சாகோக் நெட்வொர்க்கில் 17 புதிய ஆய்வகங்கள் சேர்க்கப்படும் என்று ஹர்ஷ் வர்தன் அமைச்சரவை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. INSACOG எனப்படும் 'தி இந்தியன் SARS-COV 2 ஜீனோமிக்ஸ் மீதான கூட்டமைப்பு' நாடு முழுவதும் பரவியுள்ள பத்து தேசிய ஆய்வகங்களின் ஒரு குழுவாகும். இது கடந்த ஆண்டு டிசம்பர் 25 அன்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.

ALSO READ:  DRDO 2-DG: கொரோனா சிகிச்சையில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது 

கோவிட் எதிர்ப்பு மருந்து DRDO 2-DG அறிமுகம்: 
கொரோனா வைரஸின் மரபணு சங்கிலியை உருவாக்குவதும், மரபணு மாறுபாடுகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு இடையிலான உறவை ஆராய்வதும் இந்த குழுவின் பணியாகும். அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், 'இந்தியாவில் 26 நாட்களுக்குப் பிறகு முதல்முறையாக, கொரோனா வைரஸ் தொற்றின் ஒரு நாள் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்குக் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,01,461 குறைந்துள்ளது.' என்றார். நாட்டின் முதல் கோவிட் எதிர்ப்பு மருந்தான 2-டி.ஜி.யின் (DRDO 2-DG) வெளியீட்டிற்காக பாதுகாப்பு விஞ்ஞானிகளின் முயற்சிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

ஆக்ஸிஜன் சார்பு குறைக்கப்படும்
நாட்டில் தொற்றுநோயைக் (Pandemic) கையாள்வதில் இந்த மருந்து மிகவும் முக்கியமானது என்பதை சுகாதார அமைச்சர் உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார். ஏனெனில் இந்த மருந்தின் பயன்பாடு கோவிட் -19 நோயாளிகள் ஆக்ஸிஜனை சார்ந்து இருப்பதைக் குறைக்கும். அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, தொற்றுநோயை சமாளிக்க மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களுக்கு உதவி வருகிறது. மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 4.22 கோடிக்கும் அதிகமான என்-95 முகக்கவசங்கள், 1.76 கோடி. பிபிஇ கருவிகள், 52.64 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் 45,066 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ALSO READ: ஒரே நிமிடத்தில் கொரோனா தடுப்பூசி cowin.gov.in தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News