ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

FM Nirmala Sitharaman on Pension: மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோருக்கு பெரிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நீங்களும் ஓய்வூதிய திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், இனி உங்களுக்கு பெரிய பலன் கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 2, 2023, 04:40 PM IST
  • புதிய விதிகளை கொண்டுவந்த மத்திய அரசு.
  • ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சி செய்தி.
  • ஓய்வூதியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.28,138 கோடி நிதி ஓதிக்கீடு
ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு title=

Pension Scheme Latest News: ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு மிகப் பெரிய தகவல் ஒன்றை அளித்துள்ளது. அந்த வகையில் நீங்களும் ஓய்வூதியத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், இனி நீங்கள் பெரிய பலன் பெறுவீர்கள். ஆம், 2023-24 யூனியன் பட்ஜெட்டில், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஆயுதப்படைகளின் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான திருத்தம் மற்றும் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக ரூ.28,138 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வரும் காலங்களில் பெருமளவில் பயனடைவார்கள்.

எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது
2022-23 நிதியாண்டில் 3,582.51 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், 2023-24 நிதியாண்டில் 5,431 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை பட்ஜெட் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் பெண்களுக்கான சூப்பர் திட்டம்! 7.5 % வட்டி வழங்கும் புதிய சேமிப்பு திட்டம்!

மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட ஜாக்பாட் அறிவிப்பு
இந்த மேம்பாடு இந்தியா முழுவதும் உள்ள மூத்த படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு 'பணமில்லா சுகாதாரம்' மற்றும் சிறந்த 'சேவை டெலிவரி' ஆகியவற்றை உறுதி செய்யும். யூனியன் பட்ஜெட்டில் அக்னிவீர் கோஷுக்கு விலக்கு-விலக்கு-விலக்கு (இ-இ-இ) அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டில், பாதுகாப்பு ஓய்வூதிய பட்ஜெட்டில் 15.5 சதவீதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஓட்டுமொத்தமாக 2023-24 பட்ஜெட் மதிப்பீட்டில் இந்தத் தொகை ரூ.1,38,205 கோடியாகவும், 2022-23 பட்ஜெட் மதிப்பீட்டில் இந்தத் தொகை ரூ.1,19,696 கோடியாகவும் இருந்தது.

மறுபுறம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு (சிவில்) மூலதன ஒதுக்கீடாக ரூ.8 ஆயிரத்து 774 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கு தனியாக ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் வருவாய் செலவினமாக ரூ.4 லட்சத்து 22 ஆயிரத்து 162 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உங்களிடம் ‘இந்த’ 50 ரூபாய் நோட்டு இருந்தால் நீங்களும் அம்பானியாகலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News