Bihar Election 2020: 2015 தேர்தலை விட வாக்குபதிவு சதவீதம் குறைவு; 6 மணி வரை 53.54 % வாக்குப்பதிவு

முதல் கட்டமாக (First Phase) மாலை 6 மணி வரை 53.54  சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.​​

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2020, 09:48 PM IST
Bihar Election 2020: 2015 தேர்தலை விட வாக்குபதிவு சதவீதம் குறைவு; 6 மணி வரை 53.54 % வாக்குப்பதிவு title=

Bihar Election 2020: பீகார் தேர்தல் 2020: பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கான (Bihar Legislative Assembly election) முதல் கட்ட வாக்களிப்பு முடிந்துவிட்டது, இருப்பினும் சில இடங்களில் 6 மணிக்கு மேலும் வாக்களிப்பு நடைபெற்றது. முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்ற  71 இடங்களில் 52.24 சதவீத வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா (Sunil Arora) தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 54.94 சதவீதமாக முதல் கட்டத்தில் இருந்தது என்று அவர் கூறினார். அதுவே மக்களவைத் தேர்தலில் இது 53.54 சதவீதமாக இருந்தது. மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் பிற்பகல் 3 மணி வரை வாக்குபதிவும், ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற அனைத்து பகுதிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது என்றார்.

முதல் கட்டமாக (First Phase) மாலை 6 மணி வரை 53.54  சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.​​ ஆறு மணி வரை, ஷெய்க்புராவில் 55.96%, பாட்னாவில் 52.51%, போஜ்பூரில் 48.29%, பக்சரில் 54.07%, கைமூரில் 56.20%, ரோஹ்தாஸில் 49.59%, அர்வாலில் 53.85%, ஜெஹனாபாத்தில் 53.93%. %, கயா 57.05%, நவாடா 52.34%, ஜமுய் -57.41%. இது தவிர, பாகல்பூரில் 54.20%, பாங்காவில் 59.57%, முங்கரில் 47.36%, லகிசாரையில் 55.44% வாக்கு பதிவாகியது.

ALSO READ | WATCH: பீகார் தனிமைப்படுதல் முகாமில் நடனமாடி அசத்தும் தாத்தா..!

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டமாக, பாட்னா மாவட்டத்தின் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உட்பட 16 மாவட்டங்களில் உள்ள 71 இடங்களுக்கு (71 Assembly Constituencies) வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) அமைதியாக நடந்தது.

 

முதல் கட்டத்தில் 55 இடங்களில் வெற்றி பெறுவோம்: மெஜா கூட்டணி:
முதல் கட்டத்தில் 71 இடங்களில் 55 இடங்கள் கிடைக்கும் என்று மெகா கூட்டணி கூறியுள்ளது. மெகா கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜா, மெகா கூட்டணிக்கு ஆதரவாக, வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர் என்று கூறினார். மெகா கூட்டணி அதிக இடங்களை பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போகிறது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News