குழந்தை திருமணத்திற்கு எதிராக பீகாரில் பிரச்சாரம்!

பீகாரில் குழந்தை திருமணம் மற்றும் வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரம் இன்று(திங்கள்) தொடங்கியது.

Last Updated : Oct 2, 2017, 03:16 PM IST
குழந்தை திருமணத்திற்கு எதிராக பீகாரில் பிரச்சாரம்! title=

பாட்னா: பீகாரில் குழந்தை திருமணம் மற்றும் வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரம் இன்று(திங்கள்) தொடங்கியது.

மகாத்மா காந்தியின் 148-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தினை ஒட்டி, புதியதாக கட்டப்பட்டுள்ள பாப்பு சாகாகர் மாநிலத்தில், முதல்வர் நிதீஷ் குமார் இப்பிரச்சாரத்தை தொடங்கினார்.

பீகாரில், குறிப்பாக கிராமப்புறங்களில், குழந்தைகளுக்கு எதிராக சட்டங்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பீகாரில் நடைபெறும் மொத்த திருமணங்களின் 69 சதவீத குழந்தை திருமணங்களாக இடம்பெற்று இருந்தது.

சமீபத்திய ’தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை-4’ ன் படி, கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் மத்தியில் கல்வி அதிகரிப்பு காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

Trending News