Farmers Protest: 1000km சைக்கிளில் பயணித்து டில்லி போராட்டத்திற்கு வந்த விவசாயி

பீகாரைச் சேர்ந்த 60 வயதான சத்யதேவ் மஞ்சி என்ற விவசாயி தனது சொந்த ஊரான சிவானில் இருந்து விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள சைக்கிளில் டெல்லி வந்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 18, 2020, 11:18 AM IST
  • டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 23 வது நாளாகத் தொடர்கிறது.
  • பீகாரிலிருந்து ஒரு விவசாயி சைக்கிளில் டெல்லி போராட்டத்திற்கு வந்தார்.
  • பல தரப்பிலிருந்தும் விவசாயிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
Farmers Protest: 1000km சைக்கிளில் பயணித்து டில்லி போராட்டத்திற்கு வந்த விவசாயி title=

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 23 வது நாளுக்குள் நுழையும் நிலையில், மத்திய அரசின் மூன்று சர்ச்சைக்குரிய வேளான் மசோதாக்களுக்கு எதிரான போராட்டத்தில் அதிகமான விவசாயிகள் சேர்ந்து வருகின்றனர்.

வியாழக்கிழமை, பீகாரைச் சேர்ந்த 60 வயதான சத்யதேவ் மஞ்சி தனது சொந்த ஊரான சிவானில் இருந்து விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள டில்லியை நோக்கி சைக்கிளில் புறப்பட்டார்.

அவரது பயணத்தை முடிக்க அவருக்கு 11 நாட்கள் பிடித்தன. மற்ற விவசாயிகளுடன் சேர்ந்து, மூன்று வேளான் மசோதாக்களையும் (Farm Bills) திரும்பப் பெற மஞ்சியும் மத்திய அரசிடம் முறையிட்டார்.

விவசாயிகளின் போராட்டத்தில் (Farmers Protest) கலந்துகொள்ள இந்த விவசாயி, டெல்லி-ஹரியானா எல்லை வரை சைக்கிளில் வந்தார் என செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. தெரிவித்தது.

"எனது சொந்த மாவட்டமான சிவானில் இருந்து இங்கு வர எனக்கு 11 நாட்கள் பிடித்தன. மூன்று வேளான் சட்டங்களையும் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று மஞ்சி கூறினார்.

ALSO READ: Farmers Protest: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த Supreme Court

மத்திய அரசு (Central Government) சமீபத்தில் மூன்று வேளான் மசோதாக்களை நிறைவேற்றியது:

-வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா, 2020

- விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா 2020

- அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020

இந்த மசோதாக்களை எதிர்த்து தேசிய தலலைநகரின் பல்வேற் மாநில எல்லைகளில் விவசாயிகள் நவம்பர் 26 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லியில் (Delhi) குளிர் மக்களை வாட்டும் நிலையில், வெட்ட வெளியில் நாட்டின் பல மாநிலங்களிலிருந்து வந்துள்ள விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் பல தரப்பிலிருந்தும் விவசாயிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பொது மக்கள் முதல் பிரபலங்கள் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

ALSO READ: வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News