பாஜகவினர் மீது காரில் வந்து மோதிய எதிர்கட்சி எம்எல்ஏ; 20க்கும் மேற்பட்டோர் காயம்

ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-வின் கார், பாஜக ஊர்வலத்தில் புகுந்ததால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2022, 03:40 PM IST
  • பாஜக ஊர்வலத்தில் புகுந்த காரில் அடிப்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • 15 பேர் பாஜக தொண்டர்கள் மற்றும் 7 பேர் போலீஸார் ஆவர். 5 பேருக்கு தீவிர காயம்.
பாஜகவினர் மீது காரில் வந்து மோதிய எதிர்கட்சி எம்எல்ஏ; 20க்கும் மேற்பட்டோர் காயம் title=

ஒடிசாவில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வரும் 24-ஆம் தேதியுடன் தேர்தல் நிறைவடையும் நிலையில் பாணாப்பூரில் பாஜகவினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பிஜூ ஜனதா தள கட்சியின் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ பிரசாந்த் ஜெக்தேவ் அவ்வழியே  SUV காரில் கூட்டத்திற்குள் ஓட்டியடி வந்தார். போலீசாரும் பாஜக தொண்டர்கள் சிலரும் அந்தக் காரை தடுக்க முற்பட்டனர். 

மேலும் படிக்க | அதிசயம், ஆனால் உண்மை! காற்றில் உள்ள கார்பனில் இருந்து தயாரிக்கப்பட்ட வைரம்..!!

ஆனால் மிக வேகமாக வந்த கார் கட்டுக்கடங்காமல் கூட்டத்தை நோக்கி சென்றது. அப்போது அந்த கார் வேகமாக மோதியதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் 15 பேர் பாஜக தொண்டர்கள் மற்றும் 7 பேர் போலீஸார் ஆவர். இதில் 5 பேருக்கு தீவிர காயம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், காரை ஓட்டி வந்து கூட்டத்திற்குள் விட்டதால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் காரை ஓட்டிய பிரசாந்த் ஜெக்தேவ் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் படுகாயமடைந்து இரத்தம் கொட்டும் நிலையில் போலீசார் அவரை மீட்டு அழைத்து சென்றனர். 

 

 

விசாரணையில், பிரசாந்த் ஜெக்தேவ் மது போதையில் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, பாஜக தலைவர் ஒருவரை தாக்கியதாகப் பிரசாந்த் ஜெக்தேவ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஜக தொண்டர்களை ஓடிசா மாநில பாஜக தலைவர் சமீர் மொகன்டி நேரில் சென்று பார்வையிட்டார். 

பின்னர் பேசிய அவர், பிஜு ஜனதா தள கட்சியின் எம்எல்ஏவான பிரசாந்த் ஜெக்தேவ் மீது ஏற்கெனவே மோசமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்றும், அவருடைய குற்றங்களுக்கு அவர் தண்டிக்கப்படவேண்டும் என்றும், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க | நடுரோட்டில் பேருந்து மீது ஏறி தியானம் செய்த இளைஞர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News