2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது..

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என்ற மசோதா உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது!

Last Updated : Jun 27, 2019, 09:09 AM IST
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது.. title=

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என்ற மசோதா உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது!

உத்தரகாண்ட் பஞ்சாயத்து மசோதா 2019, நேற்று முன் தினம் அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டசபை ஒப்புதல் வழங்கியுள்ள இந்த சட்டத்தின் மூலம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் SC/ST வகுப்பைச் சேர்ந்த ஆண்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது. 

அதேபோல் SC/ST பெண்கள் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம். மேலும் 2 குழந்தைகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் இந்த புதிய சட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் உத்தரகாண்டில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

Trending News