2வது மனைவி சோபிதாவிற்கு நாக சைதன்யா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

Naga Chaitanya Request Sobhita Dhulipala : நடிகர் நாக சைதன்யாவிற்கு சமீபத்தில் சாேபிதாவுடன் திருமணம் நடந்தது. இதையடுத்து, அவர் தனது 2வது மனைவிக்கு கண்டீஷன் போட்டது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Dec 19, 2024, 11:44 AM IST
  • சோபிதாவிற்கு நாக சைதன்யா போட்ட கண்டீஷன்!
  • மனம் திறந்த சோபிதா..
  • என்ன கண்டீஷன் தெரியுமா?
2வது மனைவி சோபிதாவிற்கு நாக சைதன்யா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா? title=

Naga Chaitanya Request Sobhita Dhulipala : 2024-ல் பல்வேறு திரை பிரபலங்கள் தங்கள் வாழ்க்கை துணையை கரம் பிடித்துக்காெண்டனர். அதில், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திருமணமாக இருந்தது, நாக சைதன்யா-சோபிதாவின் திருமணம்தான். இந்த ஜோடி குறித்த தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாக சைதன்யா-சோபிதா திருமணம்!

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நாக சைதன்யா, 2017ஆம் ஆண்டில் நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். காதல் திருமணமாக இருந்தாலும், ஒரு சில காரணங்களினால் இருவரும் 3 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு 2021ஆம் ஆண்டில் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். அதிலிருந்து இருவருமே எங்கும் வெளியே பார்த்துக்கொள்வதோ, பேசிக்கொள்வதோ இல்லை. இந்த நிலையில்தான், நாக சைதன்யா நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது. 

சமந்தாவுடனான விவாகரத்து முடிந்து, 1 ஆண்டிற்கு பிறகு 2022ஆம் ஆண்டில் இருவரும் டேட்டிங் செய்யத்தொடங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன், இம்மாதம் 4ஆம் தேதி எளிமையான முறையில் ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர். 

சோபிதாவிற்கு நாக சைதன்யா போட்ட கண்டீஷன்!

நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட்டில் பிரபலமாக வலம் வரும் நடிகையாக விளங்குகிறார். 2013-ல் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற இவர் அதன் பிறகு அறிமுகமானதும் பிரபலமானதும் பாலிவுட் படங்கள் மூலமாகத்தான். இதற்கிடையில் சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில், தற்போது நாக சைதன்யாவை திருமணம் செய்து முடித்த பிறகு ஒரு சில நேர்காணல்களில் இவர் கலந்து கொண்டார். அப்போது, தனது திருமணம் குறித்தும் நாக சைதன்யா குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, அவர் தனக்கு அளித்த அன்பு கட்டளை குறித்தும் பேசியிருக்கிறார். 

மேலும் படிக்க | Aishwarya Arjun : புது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

Sobita

நாக சைதன்யா-நாக சைதன்யாவின் குடும்பம் மிகவும் பாரம்பரியமானது என்று கூறிய் அவர், அவர்கள் அனைவரின் மொழியும் தெலுங்குதான் என்றும் கூறினார். இருப்பினும் வீட்டில் பெரும்பாலான நேரங்களில் தெலுங்கு பேசுவதே இல்லை என சோபிதாவிடம் கூறியிருக்கிறார் நாக சைதன்யா. காரணம், அவரது சகோதரர் அகில் அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர் என்பதால் பெரும்பாலான நேரங்களில் இவர் ஆங்கிலத்தில் பேசுவாராம். இதனால், தன்னுடன் தெலுங்கில் பேச யாருமே இல்லை என்று ஏக்கமாகி போய்விட்டாராம் நாக சைதன்யா. 

சோபிதாவின் தாய் மொழியும் தெலுங்கு என்பதால், வீட்டில் இருக்கும் போது தன்னுடன் தெலுங்கில் பேசுமாறு சோபிதாவிற்கு அன்பாக கட்டளையிட்டாராம். இதை ஏற்று, சோபிதாவும் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவருடன் தெலுங்கிலேயே பேசி வருகிறாராம். 

வெறுப்பை பரப்பும் நெட்டிசன்கள்..

சோபிதா-நாக சைதன்யாவின் திருமணம் முடிந்த பின்பும் அதற்கு முன்னரும் இவர்கள் வீடியோ பல இணையத்தில் வைரலானது. திருமணம் முடிந்த கையோடு இவர்கள் கோயில்களுக்கு சென்று சாமி கும்பிட்டதும், சோபிதாவின் முடியை நாகார்ஜுனா ஒதுக்கி விட்டதும் இணையத்தில் வைரலாகி வெறுப்பை சம்பாதித்தது. சிலர், சமந்தாவுடன் திருமண உறவில் இருக்கும் போதே நாக சைதன்யா சோபிதாவுடன் உறவில் இருந்ததாகவும் கூறி வருகின்றனர். எது எப்படியிருப்பினும், இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பது மட்டும் சில புகைப்படங்கள் பார்க்கும் போது தெரிகிறது. 

மேலும் படிக்க | தாலி கட்டிய நாக சைதன்யா..மேடையில் எமோஷனல் ஆன சோபிதா! வைரல் போட்டோஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News