புது டெல்லி: பட்ஜெட் அமர்வின் இரண்டாம் கட்டம் இன்று முதல் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. டெல்லியில் கலவரம் தொடர்பான பிரச்சினை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் மத்திய அரசை நாடாளுமன்றத்தில் சுற்றி வளைக்கத் தயாராகி விட்டன. சில கட்சிகளும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளன.
ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுத்து, டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அதேபோல சிபிஐ பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.ரகேஷும் சபையில் டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் காலை முதலே தயாராக வந்தனர். மக்களவையில் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் வழிநடத்தும். மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, டெல்லியில் கலவரம் தொடர்பான பிரச்சினையை வலுவாக எழுப்புவதாகவும், வன்முறைக்கான காரணத்தைக் கேட்பதாகவும் தெரிவித்தார்.
டெல்லி கலவரத்தின் மாஸ்டர் பாஜக. மிகப்பெரிய வில்லன அமித் ஷா. ராமாயணத்தில் ராவணன் இருந்தான். இந்தியாவின் ராவணன் அமித் ஷா என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் டெல்லி கலவரத்தை எதிர்த்து டி.எம்.சி மாநிலங்களவை எம்.பி.க்கள் கண்ணில் கருப்பு ரிப்பனை அணிந்து சபைக்கு வந்தனர்.
மேலும் மக்களவையில் அதிக கூச்சல் குழப்பம் இருந்தால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி கோரிக்கை வைத்துள்ளது. டெல்லி கலவரம் குறித்து கலந்துரையாட குலாம் நபி ஆசாத், சஞ்சய் சிங் உள்ளிட்ட மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கோரிக்கை வைத்து கோசங்களை எழுப்பினார்கள். இதன் பின்னர், மாநிலங்களவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.