அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 75 இடங்களில் வென்று, 2-வது முறையாக ஆட்சியை பிடித்தது.
ஆனால், அங்கு யார் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறித்து சஸ்பென்ஸ் நிலவி வந்தது. இந்நிலையில், பாஜக தலைவர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாமில் (Assam), கடந்த தேர்தலின்போது அஸ்ஸாம் முதல்வராக இருந்த சர்பானந்த சோனாவாலை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தி பாஜக தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே பாஜக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது.
ஹிமாந்தா பிஸ்வா சர்மா, சர்பானந்த சோனாவால் இருவருமே முதல்வர் பதவிக்கு தகுதியானர்வர்கள் என்பதால், இருவரில் யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தில்லியில், பாஜக மேலிடம் இருவரிடமும் ஆலோசனை நடத்தியது. அதன் பின்னரே, இன்று காலை குவஹாத்தியில் நடைபெற்ற சட்ட பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இன்று மாலை அஸ்ஸாம் மாநில ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஹிமாந்தா பிஸ்வா சர்மா உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
With the blessings of the people, tendered my resignation as the Chief Minister of Assam to the Hon'ble Governor Shri @jagdishmukhi ji in Raj Bhavan, Guwahati. pic.twitter.com/t4cu5jsfjQ
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) May 9, 2021
இதை அடுத்து, முதலமைச்சர் சர்பானந்த சோனாவால், தனது ராஜினாமா கடிதத்தை அஸ்ஸாம் ஆளுநரிடம் சமர்பித்தார்.
ALSO READ | மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை; அஸ்ஸாமிற்கு தப்பியோடும் பாஜக தொண்டர்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR