மகாராஷ்டிராவின் ஜல்கானில் பாஜக தலைவர் ரவீந்திர காரத் உட்பட 4 பேர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்..!
டெல்லி: உள்ளூர் பாரதிய ஜனதா தலைவரும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரும் ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் மூன்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாஜக கார்ப்பரேட்டர் ரவீந்திர காரத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் இல்லத்திற்குள் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாஜக தலைவர் ரவீந்திர காரத், அவரது சகோதரர் சுனில் காரத், மகன்கள் ரோஹித் மற்றும் பிரேம் சாகர் மற்றும் ஒரு நண்பர் சுமித் பெட்ரே ஆகியோர் பூசாவல் நகரில் உள்ள தங்கள் இல்லத்திற்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்லப்பட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு (SP) பஞ்சாப்ராவ் உகலே ANI-இடம் தெரிவித்துள்ளார்.
Maharahstra:BJP leader Ravindra Kharat,3 members of his family&his son's friend, died after being attacked by unidentified miscreants in Bhusawal, Jalgaon. Police say,'Miscreants fired at deceased people&attacked them with knives outside their house,3 arrested, probe on.' (06.10) pic.twitter.com/ZjAmL6V5h6
— ANI (@ANI) October 6, 2019
இந்த சம்பவம் நேற்று இரவு 9:30 மணியளவில் நடந்தது, இதில் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். காயமடைந்த மற்ற 3 பேரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், அவர்கள் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்தி பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
"ப்ரிமா ஃபேசியா இது ஒரு தனிப்பட்ட தகராறு போல தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் மூன்று பேரை கைது செய்து வைத்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன" என்று உகலே கூறினார். இது தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.