மேகாலயா தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

மேகாலயா சட்டமன்ற தேர்தலுக்கான 45 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது!

Updated: Feb 2, 2018, 06:28 PM IST
மேகாலயா தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!
File Photo

மேகாலயா சட்டமன்ற தேர்தலுக்கான 45 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது!

60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா சட்டசபைக்கான சட்டமன்ற தேர்தல் வரும் பிப்.,27-ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த வாக்குகள் எண்ணப்பட்டு வரும் மார்ச் மாதம் 3-ஆம் நாள் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகிறது.

இந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலில் முதல் கட்டமாக 45 பேர் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த ஜன., 2 ஆம் நாள் பாஜக-வில் இணைந்த அல் ஹெக், சான்சர் ஷுல்லா, ராபினஸ் சைங்கன் மற்றும் ஜஸ்டின் த்கார் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது!

பாஜக மாநில மஹிலா மொராச்சாவின் தலைவர் பெலிசி ஸ்னாயிங்ங் (ரணிகோர் தொகுதியில் இருந்து) மற்றும் மரியன் மாரிங் (ரி-போயி மாவட்டத்தில் உள்ள நங்போ தொகுதியில் இருந்து) என இரு பெண்களும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள பட்டியல்...