வரும் 28 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நடைபெற இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கடும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சின் தலைவர்கள் பலர் மத்திய பிரதேசத்தில் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் பாஜக தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், காங்கிரஸ் தாங்கள் இழந்த ஆட்சியை மீட்கவும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.
இந்நிலையில், பிஜேபி "விஷன்" என்ற தலைப்பில் தனது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முதலைமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் உட்பட பாஜக தலைவர்கள் அறிக்கையை வெளியிட்டனர்.
அவர்களது அறிக்கையில், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கட்சி முக்கியத்துவம் அளிக்கும் என்றும், அவர்களுக்கு பயன்பெறும் வகையில் பல திட்டங்களை உருவாக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.