ஜம்மு-காஷ்மீரின் குல்காம் (Gulgam) மாவட்டத்தில் உள்ள வெசுவில், பாஜக சர்பஞ்சின் மீது அவரது வீட்டிற்கு வெளியே, சில அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த சர்பஞ்ச் சஜ்ஜத் அகமது காண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளது.
காண்டே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4), ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மற்றொரு சர்பஞ்ச் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் தீவிர காயங்களைப் பெற்றார். அந்த சர்பஞ்ச பின்னர், ஜம்மு காஷ்மீரின் (Jammu Kashmir) க்வாசிகுண்ட் பகுதியில் உள்ள அக்ரான் கிராமத்தைச் சேர்ந்த ஆரிஃப் அகமது என அடையாளம் காணப்பட்டார்.
கழுத்தில் துப்பாக்கிச் சூடு காயத்துடன் அஹ்மத் க்வாசிகுண்டில் உள்ள அவசர நிலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய உயர் போலீஸ் அதிகாரி, "பயங்கரவாதிகள் அக்ரானில் ஆரிஃப் அஹ்மத் என்ற சர்பஞ்சின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர் க்வாஸிகுண்டில் உள்ள அவசர நிலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது கழுத்தில் துப்பாக்கிச் சூடால் காயம் ஏற்பட்டுள்ளது. நிலைமை சற்று மோசமாக உள்ளது” என செவ்வாயன்று தெரிவித்தார்.
தற்போது தாக்கப்பட்டுள்ள சர்பஞ்ச் சஜ்ஜத் அகமது காண்டேவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.
ALSO READ: ஜம்மு-காஷ்மீரின் புதிய L-G-ஆக முன்னாள் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா நியமனம்