கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். இதனையடுத்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு அடுத்த மாதம் 8-ம் தேதியுடன் ஒராண்டுகள் நிறைவடைய உள்ளன.
இந்த நாளை கருப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், தி.மு.க, திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18 கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நாளில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அறிவிப்பை அடுத்து அதே நாளை கருப்புப்பண ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.