கோவில் கட்டுவதற்கு முன்னர் முதலில் கழிப்பறையை கட்டுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடைபெற்ற மாணவர் மாநாட்டில் கூறியிருந்தார்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவில் உள்ள பத்ராசா கிராமத்தில் கழிப்பறை இல்லாமல் உள்ள வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பத்ராசா கிராமம் சரோஜினி நகர் பகுதிகுள் வருவதால், அந்த நகரின் டெவலப்மென்ட் ஆணையர் எந்தவித அறிவிப்புமின்றி நேரடியாக கழிப்பறை இல்லாத வீடுகளில் மின் இணைப்பை துண்டித்தார்.
இச்செயலால் அந்த கிராமக மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
Lucknow: Block Development Officer of Sarojini Nagar directs cutting electricity supply of houses without toilets in Bhadarsa village. pic.twitter.com/s27Orp56mu
— ANI UP (@ANINewsUP) September 12, 2017