Life Lessons To Learn From AR Rahman : உலகளவில் மிகப்பெரிய இசைக்கலைஞராக விளங்குபவர், ஏ.ஆர்.ரஹ்மான். எந்த மொழியாக இருப்பினும் மனிதனின் உணர்ச்சிகளை இசை வாயிலாக கடத்தி, அவர்கள் இதயத்தில் சுனாமி அடிக்க செய்வதாலோ என்னவோ நாம் இவரை இசைப்புயல் என அழைக்கிறோம். இவர், இப்போது இவ்வளவு பெரிய ஆளாக இருக்க காரணம், அவரது திறமை என்பதை தாண்டி, அவரது குணமும்தான். ரஹ்மானின் 58வது பிறந்தநாள் இன்று. இந்த நாளில், நீங்களும் உங்கள் வாழ்விலும் வெற்றியை வரவேற்க வேண்டுமென்றால் நீங்கள் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
அடக்கத்துடன் இருத்தல்:
ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்கர் உரை, அனைவருக்கும் நினைவிருக்கும். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார். பொதுவாகவே தெரிய விருதுகளை வாங்குபவர்கள், நீளமான சில உரையை கொடுப்பது வழக்கம். ஆனால் ஏ.ஆர். ரஹ்மான், தான் நன்றி தெரிவிக்க தெரிவித்தவுடன் கடைசியில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி தன் உரையை முடித்தார். இப்படி இவ்வளவு பெரிய வெற்றி இருந்தாலும் அதனை பொறுமையுடனும் அடக்கத்துடனும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இருக்க வேண்டும்.
அன்புதான் எல்லாமே!
ஏ.ஆர்.ரஹ்மான், நல்ல இசையமைப்பாளர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்ற பெயரையும் பல மத்தியில் பெற்றிருக்கிறார். இதற்கு காரணம் அவர் அனைவரிடமும் அன்பாய் பழகுவது. ஒருமுறை அவரது வெற்றிக்கு காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “என் வாழ்க்கை முழுவதும் எனக்கு அன்பு அல்லது வெறுப்பை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு முறையும் நான் அன்பை தேர்ந்தெடுத்தேன், அதனால் இங்கு இருக்கிறேன்” எனக்கூறினார். எனவே, உங்கள் வாழ்வில் அப்படி ஒரு நிலை வந்தால் எப்போதும் அன்பை தேர்ந்தெடுங்கள்.
தரம்:
பிற இசையமைப்பாளர்கள், வருடத்திற்கு பல படங்கள் சைன் செய்யும் போது, ஏ ஆர் ரஹ்மான் மட்டும் வெகு சில படங்கள் மட்டுமே கமிட் ஆவார். காரணம், அவர் எண்ணிக்கையை பார்க்காமல் தரத்தை மட்டும் பார்ப்பவர். தான் கொடுக்கும் இசை ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகள் நிலைத்து நின்று பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். நீங்களும், வெற்றி பெற வேண்டும் என நினைத்தால், உங்கள் செய்கைகள் தரமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
மன உறுதி:
அனைவரை போல, ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்விலும் பல பிரச்சனைகள் இருந்துள்ளது. திரையுலகிற்கு வந்த புதிதிலேயே அவரது தந்தை உயிரிழந்து விட்டார். ஆனால், அப்போதும் விடாமல் இசையை பிடித்துக்கொண்ட அவர், இப்போது இசையுலகின் ஜாம்பவானாக திகழ்கிறார். இப்போது கூட, இசைக்கச்சேரியில் கூட்ட நெரிசல் சர்ச்சை, மனைவியுடனான விவாகரத்து போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். ஆனால், இந்த சமயத்திலும் அவர், விடாமுயற்சியுடன் இசையை தன் வாழ்வுடன் இணைத்தவராக இருக்கிறார்.
கற்றல்:
நாம் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால், கண்டிப்பாக ஏதேனும் ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இதை பின்பற்றும் ஏ.ஆர்.ரஹ்மான், இந்திய இசை மட்டுமன்றி, உலகளவில் தனக்கு தெரியாத மொழியாக இருந்தாலும் அந்த இசையை தேடி தேடி கேட்டு, புது இசைக்கருவிகளை கூட உருவாக்கி விட்டார். இதனால்தான், எதிரில் எத்தனை இசையமைப்பாளர்களின் பெயர்கள் மாறினாலும், இவர் பெயர் டாப்பிலேயே இருக்கும்.
மேலும் படிக்க | சீக்கிரமா வெயிட் லாஸ் செய்ய ஹன்சிகா குடித்த காலை பானம்! நீங்களும் குடிக்கலாம்..
மேலும் படிக்க | 4 மாதங்களில் வெயிட் லாஸ் செய்ய வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்! ரொம்ப சிம்பிள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ