Budget 2021: Good news, Rs.6000 ஆக இருந்த PM Kisan நிதி Rs.10,000 ஆக உயரக்கூடும்

பிரதமர் கிசான் யோஜனாவின் கீழ் கொடுக்கப்படும் கிசான் சம்மான் நிதியின் அளவை ரூ .6000 லிருந்து ரூ .10,000 ஆக அரசு உயர்த்தக்கூடும் என்று கூறப்படுகிறது. 

Last Updated : Jan 22, 2021, 05:50 PM IST
  • பிப்ரவரி 1 ஆம் தேதி 2021-22 நிதியாண்டின் பொது பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்.
  • விவசாயிகளுக்காக இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும்.
  • விவசாயிகள் தொடர்பான பிற திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்படலாம்.
Budget 2021: Good news, Rs.6000 ஆக இருந்த PM Kisan நிதி Rs.10,000 ஆக உயரக்கூடும் title=

PM Kisan Yojana: நாட்டில் நடந்து வரும் உழவர் போராட்டத்துக்கு மத்தியில் பிப்ரவரி 1 ஆம் தேதி 2021-22 நிதியாண்டின் பொது பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். சங்கடத்தில் இருக்கும், போராட்டத்தில் இருக்கும் விவசாயிகளுக்காக இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் கிசான் யோஜனாவின் (PMKSNY) கீழ் கொடுக்கப்படும் கிசான் சம்மான் நிதியின் அளவை ரூ .6000 லிருந்து ரூ .10,000 ஆக அரசு உயர்த்தக்கூடும் என்று கூறப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் (Nirmala Sitharaman) அறிக்கையும் இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையாக பார்க்கப்படுகிறது. அதில் அவர் இந்த முறை பட்ஜெட் வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் போதுமானதாக இல்லை என்றும் அதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது என்றும் அரசாங்கத்திற்கு பின்னூட்டம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பட்ஜெட்டில் PM Kisan திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரிக்கக்கூடும். முன்னதாக இந்த தொகை 2019-20 நிதியாண்டில் 1.51 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது அடுத்த 2020-21 நிதியாண்டில் சுமார் 1.54 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ALSO READ: Farmer's protest: விவசாய சட்டங்களை தள்ளிப்போடும் அரசின் யோசனை வெற்றிபெறுமா?

பட்ஜெட் 2021 இல் விவசாயிகள் மீது கவனம் செலுத்தப்படும்

2021 பட்ஜெட்டில், விவசாயிகள் தொடர்பான பிற திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிராம அபிவிருத்தி, பிரதமர் விவசாய நீர்ப்பாசன திட்டம், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியவை இதில் அடங்கும். ஒட்டுமொத்தமாக, வேளான் சட்டங்களுக்கு (Farm Laws) எதிராக உருவாகியுள்ள சூழலை அமைதிப்படுத்த அரசாங்கம் விரும்புகிறது.

பிரதமர் கிசான் (PM Kisan) யோஜனாவின் பயனாளிகளின் கூற்றுபடி அவர்கள் பெறும் தொகை மிகவும் குறைவானது. ஆண்டுக்கு ரூ .6000 அதாவது மாதத்திற்கு ரூ .500 அவர்களுக்குக் கிடைக்கிறது. இந்த தொகை விவசாயிகளின் கணக்குகளில் 2000 ரூபாய்க்கான மூன்று தவணைகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த தொகை மிகவும் குறைவானது என விவசாயிகள் கருதுகிறார்கள். ஒரு விவசாயி ஒரு பெரிய நிலத்தை வைத்திருந்தால், நெல் விளைச்சலுக்கு, சுமார் 3 முதல் 3.5 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அதே நேரத்தில், கோதுமை பயிரிட சுமார் இரண்டு முதல் இரண்டரை ஆயிரம் ரூபாய் ஆகும்.

பிரதமர் கிசான் யோஜனா என்றால் என்ன, அது எப்போது தொடங்கியது

PM Kisan Yojana 1 டிசம்பர் 2018 அன்று தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கான (Farmers) நிதி உதவியே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு 2000 ரூபாய்க்கான மூன்று தவணைகள் மூலம் ஆண்டுதோறும் 6000 ரூபாயை விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்கிறது. அனைத்து விவசாயிகளுக்கும் இந்த நன்மை கிடைக்கிறது. ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் மாதங்களில் பணம் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. PM Kisan சம்மான் நிதி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த திட்டத்தின் கீழ் 11.47 கோடி பயனாளிகள் உள்ளனர்.

இந்த பணிகள் அனைத்தும் ஆன்லைனில் செய்யப்படுகின்றன. முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்படுகின்றன. பயனாளிகள் வலைத்தளத்தைப் பார்வையிட்டு தங்கள் பெயரைச் சரிபார்த்துக்கொள்ளலாம். அரசாங்கம் டெபாசிட் செய்த பின்னரும் பணம் அகௌண்டில் வரவில்லை என்றாலும், பணம் எப்போது வரும் என்ற தகவல்களையும் விவசாயிகள் வலைத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் DA, DR, பதவி உயர்வு பற்றிய good news விரைவில்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News