பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உரையாற்றுகிறார். ராம்நாத் கோவிந்த், குடியரசு தலைவரான பிறகு ஆற்றப்போகும் முதல் உரை இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கான பொருளாதார விவரங்கள் அடங்கிய, பொருளாதார ஆய்வறிக்கை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் நிறைவு பெறும்.
இந்தகூட்டத் தொடரில்,
> பிப்ரவரி 1ம் தேதி 2018 - 2019 ஆம் நிதியாண்டுக்கான யூனியன் பட்ஜெட் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் தாக்கல் செய்யப்படுகிறது.
> முத்தலாக் தடுப்பு மசோதா உட்பட பல்வேறு முக்கிய மசோதா விவாதத்துக்கு வருகின்றன.