புது டெல்லி: டெல்லியின் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் கேட் எண் 5-க்கு வெளிய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்கூட்டியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்த அனைவரும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடுவதைக் கண்டனர். கடந்த சில நாட்களில் இதுபோன்று நடக்கும் மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் சிவப்பு நிற ஸ்கூட்டியில் வந்தாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த சம்பவத்திற்குப் பிறகு ஏராளமான மாணவர்கள் அங்கு வரத் தொடங்கினர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கோபமடைந்த மாணவர்கள் ஜாமியா நகர் காவல் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவல்துறையினர் நிறுத்தப்பட்ட பின்னரும் இதுபோன்ற சம்பவங்கள் எவ்வாறு நடக்கின்றன என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். பின்னர் புகார் அளிக்கப்பட்டதால், எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.
#WATCH Delhi: People gather in protest outside Jamia Millia Islamia University following an incident of firing at gate no.5 of the university. 2 scooty-borne unidentified people had fired bullets at the spot. SHO (Station house officer) is present at the spot. Investigation is on pic.twitter.com/EKlxQPBVum
— ANI (@ANI) February 2, 2020
சி.சி.டி.வி காட்சிகள் சேகரிக்கப்பட்டன:
இந்த சம்பவம் குறித்து பேசிய ஏ.சி.பி ஜகதீஷ் யாதவ், "நாங்கள் அறிக்கைகளை பதிவு செய்துள்ளோம். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ஐபிசி மற்றும் ஆயுதச் சட்டம் பிரிவு 27 இன் பிரிவு 307 இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேட் எண்கள் 5 மற்றும் 7-லிருந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து வருகிறோம். இதன் பின்னர், வெளிவரும் உண்மைகளை எஃப்.ஐ.ஆர் உடன் சேர்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கைகள் வேறுபடுகின்றன:
முன்னதாக, கூடுதல் டி.சி.பி குமார் ஞானேஷ், "ஜாமியா நகர் எஸ்.எச்.ஓ மற்றும் அவரது குழுவினர் தூப்பாக்கி சூடு நடந்த இடத்தில் ஆய்வு மேற்க்கொண்டனர். காற்றில் சுட்டதாக புல்லட்டின் அறிகுறிகள் அங்கு காணவில்லை. மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் எந்த வாகனத்தில் இருந்து வந்தார்கள் என்பது குறித்து மக்கள் வெவ்வேறு கருத்துக்களை சொல்லுகின்றனர். சிலர் ஸ்கூட்டரில் வந்ததாகவும், சிலர் அவர்கள் நான்கு சக்கர வாகனத்தில் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். நாங்கள் விசாரித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம் என்றார்.
ஜனவரி 30 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர் காயம்:
முன்னதாக ஜனவரி 30 ஆம் தேதி, ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு வெளியே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தவர்கள் மீது மைனர் என்று கூறப்படும் ராம்பக்த் கோபால் தூப்பாக்கி சூடு நடத்தினார். இதில் மாணவர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த மாணவர் சதாப் பாரூக் எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வருகிறார். மைனர் போலீஸ் காவலில் உள்ளார். ஜாமியாவில் நடந்த மாணவர்களின் அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர், சந்தன் குப்தாவின் கொலைக்கு பழிவாங்குவதற்காக தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறினார். 2018 ஆம் ஆண்டில் காஸ்கஞ்சில் குடியரசு தினத்தை முன்னிட்டு, சந்தன் குப்தாவும் அவரது நண்பர்களும் "திரங்கா பேரணியை" மேற்கொண்டனர். பேரணிக்கான வழியைத் தெளிவுபடுத்துவது தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை படிப்படியாக வன்முறையாக மாறியது. இதில் 22 வயதான சந்தன் குப்தா துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு கஸ்கஞ்சில் மிகப்பெரிய வகுப்புவாதக் கலவரம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாஹீன் பாக் அருகே 2வது துப்பாக்கிச் சூடு நடந்தது:
இதன் பின்னர், பிப்ரவரி 1 ஆம் தேதி ஷாஹீன் பாக் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. கபில் குஜ்ஜார் என்ற நபர் போராட்டம் நடந்து வரும் இடத்திலிருந்து சற்று தொலைவில் வானத்தை நோக்கி தூப்பாக்கி சூடு நடத்தினார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இந்த சம்பவம் குறித்து கேட்டதற்கு "நம் நாட்டில் வேறு யாரும் அதிகாரம் செய்ய முடியாது. இந்துக்கள் மட்டுமே அதிகாரம் செய்வார்கள்" என்றார். தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார். இவர் நொய்டா எல்லைக்கு அருகிலுள்ள டல்லூபுரா பகுதியைச் சேர்ந்தவர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.