கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே இன்று இந்தியா வந்தடைந்தார். அவருக்கு பாரம்பரிய வரவேற்ப்பு வழங்கப்பட்டது!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் டிரூடியோ சனிக்கிழமையன்று புதுடெல்லி விமான நிலையத்தில் பாரம்பரிய வரவேற்புடன் வரவேற்கப்பட்டார்.
இப்பயணத்தில் பாதுகாப்பு மற்றும் எதிர்-பயங்கரவாத ஒத்துழைப்பு, வர்த்தக மற்றும் முதலீடு மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வழிகளில் முக்கிய கவனம் செலுத்துதல் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்களிட வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது!
#WATCH Canada Prime Minister Justin Trudeau arrived in Delhi with his family for a week-long visit to India pic.twitter.com/swiAyKZHMN
— ANI (@ANI) February 17, 2018
தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடனும் இந்தியாவுக்கு வந்துள்ள அவர் இன்று துவங்கி இந்தியாவில் 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக இந்தியாவிற்கும், கனடாவிற்குமான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்த வாரத்தின் முற்பகுதியில் சந்தித்துக் கொண்டனர்.
கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ருதியே அவர்களின் பயணம் இனிய முறையில் அமைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது!