ரியான் மானவர் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளி மானவரின் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Last Updated : Sep 23, 2017, 11:21 AM IST
ரியான் மானவர் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்! title=

குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளி மானவரின் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

குருகிராமிர் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்த மானவன் தாகுர். கொடூரமான முறையில் கொல்லப்பட்டு பள்ளியின் கழிவறையில் பினமாக கண்டெக்கப்பட்டார். 

இவ்வழக்கு தொடர்பாக பள்ளி பேருந்தில் பணியாற்றிய நடத்துநர் கைது செய்யப்பட்டார். எனினும் இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ஹரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் பரிந்துரைத்தார். அதன்படி தற்போது இவ்வழக்கினை சிபிஐ கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று(வெள்ளி) முதல் தகவல் அறிக்கையினை சிபிஐ பதிவு செய்துள்ளது. விசாரணையின் துவக்கமாக பள்ளிக்கு சென்று பள்ளியின் அதிகாரிகள், சிறுவனின் பெற்றோர் ஆகியோருடன் விசாரணை மேற்கொண்டனர்.

Trending News