பாதுகாப்புப் படையினருக்கு (Defense Forces) மத்திய அரசு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. பாதுகாப்புப் படை வீரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களுக்கு அதிக விகிதத்தில் எளிய குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்காக 7 ஆண்டுகளுக்கான தொடர்ச்சியான சேவை இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
2019 அக்டோபர் 01 முதல் மேம்படுத்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத்திற்காக (Family Pension) ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாதுகாப்புப் பணியாளர்கள் பயனடைவார்கள். 05.10.2020 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ஏழு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான சேவை இருக்க வேண்டும் என்ற நிலைமையை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
ALSO READ: Home loan அடைந்து விட்டதா? இந்த முக்கிய வேலையை செய்ய மறக்காதீர்கள்!!
அதிகரித்த விகிதத்தில், குடும்ப ஓய்வூதியம் கடைசி சம்பளத்தின் 50% என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதேசமயம் சாதாரண குடும்ப ஓய்வூதியத்தை கணக்கிடுவது கடைசி சம்பளத்தின் 30% என்ற அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் இறந்தால், இறந்த தேதிக்குப் பிறகு, வரம்பின்றி, குடும்பத்துக்கு 10 ஆண்டுகளுக்கு அதிகரித்த விகிதத்தில் நிதி உதவி வழங்குவதற்கான விதி உள்ளது. அதிகரித்த விகிதத்தில், குடும்ப ஓய்வூதியம் இறந்த தேதியிலிருந்து 7 ஆண்டுகள் 67 வயது வரை வழங்கப்படுகிறது.
7 ஆண்டு தொடர்ச்சியான சேவையை நிறைவு செய்யாமலேயே 2019 அக்டோபர் 1 ஆம் தேதிக்கு முன்னர் பத்து ஆண்டுகளுக்குள் இறந்த பாதுகாப்புப் படையின் (Defense Forces) பணியாளர்களின் குடும்பத்தினரும், 2019 அக்டோபர் 1 முதல் மேம்பட்ட குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவார்கள்.
சமீபத்தில், விவாகரத்து பெற்ற மகள்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்காக நிவாரணம் வழங்கும் விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. புதிய முறையின் கீழ், விவாகரத்து செய்வதற்கான செயல்முறை நடந்து கொண்டிருந்தாலும், பெண்ணால் இப்போது குடும்ப ஓய்வூதியம் (Family Pension) பெற உரிமை உண்டு. ஆனால் விவாகரத்துக்கான மனுவை ஓய்வூதியதாரராக இருக்கும் மகளின் தாய் அல்லது தந்தை, அவர் உயிருடன் இருக்கும்போது தாக்கல் செய்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.
ALSO READ: ஒரு நாளைக்கு 30 ரூபாய் சேமித்து கோடீஸ்வரராகும் Formula இதுதான்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR