காந்தி குடும்பத்தின் SPG பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது...

காந்தி குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோரின் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) பாதுகாப்பு படையை மத்திய அரசு திரும்பப் பெற்றது. 

Last Updated : Nov 8, 2019, 04:38 PM IST
காந்தி குடும்பத்தின் SPG பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது...

காந்தி குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோரின் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) பாதுகாப்பு படையை மத்திய அரசு திரும்பப் பெற்றது. 

எனினும்., அவர்களுக்கு தற்போது Z + பாதுகாப்பு வழங்கப்படும், இது மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பணியாளர்களால் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் அச்சுறுத்தல் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் உள்துறை அமைச்சகத்தின் (MHA) உயர் மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. புலனாய்வுப் பிரிவின் கூற்றுப்படி, காந்தி குடும்பத்திற்கு நேரடி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.

முன்னதாக,.. 1991-ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், முன்னாள் பிரதமர்களுக்கும் SPG பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து முன்னாள் பிரதமர்களின் பாதுகாப்பு கிரேட்களும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு, தேவைப்படும் போதெல்லாம் தரமாற்றம் செய்யப்படும்.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பும் நீக்கப்பட்டு, Z+ பிரிவின் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது காந்தி குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோரின் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) பாதுகாப்பு படையை மத்திய அரசு திரும்பப் பெற்று Z+ பாதுகாப்பினை அளித்துள்ளது.

பாதுகாப்பு கிரேடின் மறுஆய்வு செய்வது ஒரு குறிப்பிட்ட மற்றும் தொழில்முறை பயிற்சியாகும் என்றும் இது பாதுகாப்பு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்றும் MHA தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து MHA தெரிவிக்கையில்., "தற்போதைய பாதுகாப்பு கிரேடை மறுஆய்வு செய்வது என்பது பாதுகாப்பு நிறுவனங்களின் தொழில்முறை மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட அச்சுறுத்தல் கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட மற்றும் தொழில்முறை பயிற்சியாகும். இந்த பயிற்சிகளின் அடிப்படையில் டாக்டர் மன்மோகன் சிங் தொடர்ந்து ஒரு Z+ பாதுகாப்புப் கொண்டிருக்கிறார்," என தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், SPG பாதுகாப்பு அளிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

More Stories

Trending News