ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்..!!!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினருக்கும்  தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடக்கிறது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 13, 2020, 10:13 PM IST
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும்  பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்..!!!

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவின் பர்காம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த பகுதியில் பயங்கரவாதிகளை மறைந்திருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கப்பட்டனர். அதன் பின்னர் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதை அடுத்து, இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.

வியாழக்கிழமை பயங்கரவாதிகளைத் தாக்கி பாகிஸ்தானின் சதித்திட்டங்களை பாதுகாப்புப் படைகள் முறியடித்தன. வடக்கு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையை ஒட்டியுள்ள யூரி துறையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களை இராணுவம் மீட்டது. இதில் எம் -16 போன்ற நவீன தாக்குதல் துப்பாக்கிகளும் இருந்தன. இது தவிர, வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் பயஙக்ரவாதிகளை ஊடுருவ செய்த சதியை முறியடித்து, இரண்டு ஜெய்ஷ் பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

ALSO READ | கல்வான் தாக்குதல்: 60 சீன படையினர் கொல்லப்பட்டது அம்பலம்..!!!

புதிதாக பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்கும், எல்லையைத் தாண்டி வரும் ஜெய்ஷ் பயங்கரவாதிகளுக்கான நெட்வொர்க்கை திட்டமிடுவதற்கும் சில பயங்கரவாதிகள் குப்வாராவுக்கு வருவதை காவல்துறையினர் அறிந்திருந்தனர். இதன் அடிப்படையில் இராணுவத்துடன் குப்வாரா செல்லும் சாலையை போலீசார் தடுத்தனர்.  காவல் துறையினர் வருவதை பார்த்த, பாயங்கரவாதிகளின் கார் ஓட்டுநரும் அவருடன் அமர்ந்திருந்த ஒரு இளைஞனும் ஓட முயன்றாலும் பாதுகாப்பு படையினரால் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில், கடந்த வாரம், வடக்கு காஷ்மீரின் நவுகம் செக்டரில் (குப்வாரா) மற்றும் பூஞ்ச் ​​மாவட்டத்தின் கஸ்பா செக்டாரில் பாதுகாவல் படையினர் மீது பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்திய இராணுவத்தின் ஒரு சிப்பாய் நவுகாமில் வீர மரணம் அடைந்தார். வேறு இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

ALSO READ | எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. கடும் குளிர் காலத்திற்கு தயாராகும் துருப்புகள்..!!!