கோவிட் -19: இலவச ரேஷன், பிற நலத்திட்டங்களைத் தொடர ரூ .25,000 கோடி நிதி உதவி கோரும் முதல்வர் மம்தா

மேற்கு வங்க மாநிலத்தில் நலத்திட்டங்களை தொடர்ந்து இயங்க ரூ. 25,000 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மாநில முதல்வர் மம்தா கடிதம் எழுதியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 1, 2020, 07:51 PM IST
கோவிட் -19: இலவச ரேஷன், பிற நலத்திட்டங்களைத் தொடர ரூ .25,000 கோடி நிதி உதவி கோரும் முதல்வர் மம்தா title=

கொல்கத்தா: கோவிட் -19 (COVID-19) அச்சம் காரணமாக நாடு முழுவதும் லாக்-டவுன் (Lackdown)செய்யப்பட்டுள்ளதால் மாநிலத்தில் வருவாய் குறைந்து வருவதால், மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கவும், பிற நலத்திட்டங்களைத் தொடரவும் ரூ .25,000 கோடி நிதி உதவி கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பி.டி.ஐ (PTI) செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு பாதிப்பு:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 234-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பர்மாவையும், ஒருவர் இந்தோனேசியாவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் கோவிட் -19 வழக்குகள் 24 ஆக உயர்ந்துள்ளன:
துபாய்க்கு பயணம் செய்த பீஹார் மாநில கயாவில் வசிக்கும்  ஒரு பெண்ணுக்கு COVID-19 தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. அந்த மாநிலத்தில் மொத்த கொரோனா வழக்குகள் 24 ஆக உள்ளன என்று ANI தெரிவித்துள்ளது.

டெல்லியின் தப்லிகி ஜம்மாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், மாநிலத்திற்கு வந்த 81 இந்தியர்கள் மற்றும் 57 வெளிநாட்டினரைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது" என்று மாநில சுகாதார அதிகாரி சஞ்சய் குமார் தெரிவித்தார்.

கேரளாவில் இன்று 24  கொரோனா பாஸிட்டிவ்.. மொத்தம் 265 ஐ எட்டியது: 
கேரளாவில் புதன்கிழமை புதிதாக 24 நான்கு கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மாநிலத்தின் நோயாளிகளின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்து உள்ளது என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

கேரளாவில் 265 வழக்குகளில் 191 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள். 67 பேர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Trending News