அரியானாவில் ஒரு யுனிட்டுக்கு 2 ரூபாய் மின்கட்டணம் குறைப்பு :முதல்வர் அறிவிப்பு

ஹரியானா மாநிலத்தில் மின் கட்டணத்தை குறைத்தார் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2018, 03:17 PM IST
அரியானாவில் ஒரு யுனிட்டுக்கு 2 ரூபாய் மின்கட்டணம் குறைப்பு :முதல்வர் அறிவிப்பு title=

ஹரியானா மாநிலச் சட்டப் பேரவையின் மழைகால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் மின்கட்டணம் குறைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு நன்மை ஏற்ப்படும் வகையில் அறிவிப்பு இருந்தது. அதில் 51 முதல் 200 அலகுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் ரூ 4.50-ல் இருந்து ரூ 2.50-வாக குறைக்கப்படுகிறது. இதன்மூலம் மின் கட்டணம் ரூ. 937 லிருந்து ரூ. 500 ஆகா குறையும் எனவும் அறிவித்தார்.  

50 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் ரூ. 2.70 லிருந்து ரூ. 2 ஆகா குறைக்கப்பட்டுள்ளது.

Trending News