இந்திய சுதந்திரத்தின் விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்க்கு வாகன ஓட்டுநராக இருந்த நிஜாமுதீன் (116) நேற்று காலமானார்.
ஆஸம்கர் மாவட்டத்தில் உள்ள தக்வா கிராமத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் வயோதிகப் பிரச்னை காரணமாக நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை காலை மறைந்தார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாகன ஓட்டுநராக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் பணியாற்றியவர் நிஜாமுதீன்.
இவர் நேதாஜியுடன் 1943-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டுவரை இருந்தார். அதன் பிறகு நிஜாமுதீன் தன்னுடைய மனைவி அஜ்புல் நிஷா, மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்களுடன் உத்தரபிரதேசத்தில் உள்ள அசாம்ஹார் மாவட்டத்தின் தாக்வா என்ற கிராமத்தில் வசித்து வந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர் மற்றும் கடந்த 2014ம் ஆண்டு வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி நிஜாமுதீன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tributes to Subhas Babu's close associate, Colonel Nizamuddin. I recall my meeting with him. His demise is saddening. pic.twitter.com/9MxaIJuaAF
— Narendra Modi (@narendramodi) February 7, 2017
இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த அவர் நேற்று தன்னுடைய 116-வது வயதில் காலமானார்.