காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, இதுநாள் வரையில் தங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப்பை நீக்கிய பின்னர் நன்றி தெரிவிப்பு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதம் SPG தலைவர் அருண் சின்ஹாவுக்கு எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில், இதுவரை பாதுகாப்பு அளித்ததற்காக முழு குடும்பத்தின் சார்பாக SPG-க்கு சோனியா காந்தி தனது நன்றி தெரிவித்துள்ளார். SPG இயக்குனர் அருண் சின்ஹாவுக்கு எழுதிய கடிதத்தில், சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளதாவது., "எங்களது பாதுகாப்பு SPGயின் கைகளுக்கு வந்ததிலிருந்து, எனது குடும்பமும் நானும் எனது பாதுகாப்பு சிறந்த கைகளில் இருப்பதாக உணர்ந்தேன்.
கடந்த 28 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் SPG எங்களை பாதுகாத்த விதம், உங்கள் கடமைக்கு எங்கள் விசுவாசத்தை உணர்த்த விரும்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் SPG ஒரு அசாதாரண சக்தி என்றும் சோனியா காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் முழு பக்தியுடனும் தேசபக்தியுடனும் செயல்படுகிறார்கள் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காந்தி குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோரின் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) பாதுகாப்பு படையை மத்திய அரசு திரும்பப் பெற்றது. எனினும்., அவர்களுக்கு தற்போது Z + பாதுகாப்பு வழங்கப்படும், இது மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பணியாளர்களால் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக,.. 1991-ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், முன்னாள் பிரதமர்களுக்கும் SPG பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து முன்னாள் பிரதமர்களின் பாதுகாப்பு கிரேட்களும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு, தேவைப்படும் போதெல்லாம் தரமாற்றம் செய்யப்படும்.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பும் நீக்கப்பட்டு, Z+ பிரிவின் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது காந்தி குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோரின் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) பாதுகாப்பு படையை மத்திய அரசு திரும்பப் பெற்று Z+ பாதுகாப்பினை அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து SPG தலைவர் அருண் சின்ஹாவுக்கு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நன்றி கடிதம் எழுதியுள்ளார்.
குறிப்பு: முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், SPG பாதுகாப்பு அளிக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.