ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு காங்கிரசுக்கு தகுதி இல்லை: மோடி!

நாங்கள் ஜனநாயகத்தின் அடையாளம் எனவும், மக்களாட்சி பற்றி பேசுவதற்கு காங்கிரஸுக்கு உரிமை இல்லை  என மக்களவையில் பிரதமர் மோடி கூறினார்.

Updated: Feb 7, 2018, 01:49 PM IST
ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு காங்கிரசுக்கு தகுதி இல்லை: மோடி!
ANI

ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் தொடங்கியது. அந்த விவாதத்துக்கு மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றி வருகிறார்.

காங்கிரஸ், ஜனதா தளம், இந்தியாவை பிரிக்கிறது, சர்தார் படேலுக்கு அநீதி செய்தது என்றார்.

மேலும் அவர்,மக்களாட்சி பற்றி பேசுவதற்கு காங்கிரஸுக்கு உரிமை இல்லை என்று கூறி வருகிறார்.

வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நிலை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளித்து வருகிறார்.

>நாங்கள் ஜனநாயகத்தின் அடையாளம். காங்கிரஸ் பிரிவினையின் அடையாளம்.வாஜ்பாய் ஆட்சியில் 3 மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. நாங்கள் மாநிலங்களை உருவாக்கினோம். காங்கிரஸ் பிரிவினை உருவாக்கியது. அரசியல் லாபத்திற்காக ஆந்திராவை பிரித்தீர்கள். அரசியல் நோக்கத்திற்காக முடிவு எடுக்கக்கூடாது என்பதை வாஜ்பாய் செய்து காண்பித்தார்.காங்கிரஸ் செய்த பாவங்களுக்கு மக்கள் விலை கொடுத்து வருகின்றனர்.

>காங்கிரஸ் நாட்டிற்காக உழைத்திருந்தால், நாம் சிறப்பான இடத்தில் இருந்திருப்போம். நாட்டின் வளர்ச்சியை முடக்கியதில் காங்கிரசுக்கு பங்கு உண்டு. ஆந்திர தலித் முதல்வரை ராஜிவ் அவமானப்படுத்தினார். காங்கிரஸ் அவமானப்படுத்தியதால் தான் தெலுங்கு தேச கட்சி உருவானது.மன்மோகன் சிங்நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தார். தமிழகம், கேரளா, ஆந்திர மாநில வளர்ச்சிக்கு காங்கிரஸ் என்ன செய்தது.

>எந்த காரணமும் இல்லாமல் காங்கிரஸ் என்னை விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா வளர்ச்சி பெறவில்லை. ரேடியோவும், டிவியும் காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டன. எதிர்ப்பை வெளிக்காட்ட காங்கிரஸ் ஆட்சியில் இடமில்லை. நீதித்துறை உள்ளிட்ட அனைத்தும் காங்கிரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

>ஜனநாயகம் நமது ரத்தத்தில் உள்ளது. ஆனால், அதனை காங்கிரசும், நேருவும் கொண்டு வரவில்லை. ஜனநாயகம் தழைப்பதையும் காங்கிரஸ் தடுத்தது. ஜனநாயகம் குறித்து பேச காங்கிரசுக்கு இடமில்லை. என்றார்.