குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கும் காங்கிரஸ் தலைவர்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து காங்கிரசின் மூன்று முகங்களும் பேசியுள்ளன. அவர்களின் கருத்துக்கள் என்ன என்று பாப்போம்...!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2020, 02:52 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கும் காங்கிரஸ் தலைவர்கள் title=

புது தில்லி: இந்தியாவின் தேசியவாத குடிமக்களுக்கும் நாட்டின் தேசியவாத (Modi Govt) அரசாங்கத்திற்கும் ஒரு நல்ல செய்தி. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து காங்கிரசின் மூன்று பெரிய பெயர்களும் மூன்று பெரிய முகங்களும் பேசியுள்ளன. இது சோனியா காந்திக்கு நெருக்கடி என்றாலும், மோடி அரசாங்கத்திற்கு மறைமுக ஆதரவாக உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், ஆதரவு என்பது ஆதரவு தான். CAA, NCR, NPR போன்ற சட்டங்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆதரவு குரல் வருகிறது என்றால், அது மோடி-அமித் ஷாவின் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

நாட்டில் உள்ள ஒரு சில மாநில அரசுகள் குடியுரிமை திருத்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என்று கூறி உள்ளன. அதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதாவது மாநில அரசுகள் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என சொல்வது சட்டத்திற்குப் புறம்பானது என மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. 

இந்தநிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்த எந்த மாநிலமும் மறுக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். அதாவது பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை மாநிலத்தில் அமல் செய்ய முடியாது சொல்ல முடியாது. அது அரசியலமைப்பிற்கு விரோதமானது. மாநில அரசு அதை எதிர்க்கலாம். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாம் மற்றும் அதை திரும்பப் பெறுமாறு மத்திய அரசிடம் கேட்கலாம் என்று அவர் கூறினார்.

அதேபோல முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித், குடியுரிமை (திருத்தம்) சட்டம் (CAA) குறித்த கருத்துக்கு பதிலளித்தபோது, "சட்ட புத்தகத்தில் ஏதேனும் இருந்தால், நீங்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும், இல்லையெனில் விளைவுகள் ஏற்படலாம்" எனக் கூறினார்.

நாட்டின் உள்ள நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. அதன்பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு, கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News