ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக சட்டசபையில் இருந்து ராஜினாமா செய்த மத்திய பிரதேசத்தில் உள்ள 6 கிளர்ச்சி அமைச்சர்கள், தாங்கள் தங்கள் விருப்பப்படி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தூண்டுதலின் பேரில் எல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அமைச்சர்கள் தனி வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர். டெல்லியில் வைத்து பாஜக-வில் சிந்தியா இணைந்த சில நிமிடங்கள் கழித்து இந்த வீடியோ கிளிப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறித்த இந்த தனி வீடியோ செய்திகளில், அமைச்சர்கள் - துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத், மகேந்திர சிங் சிசோடியா, இமார்டி தேவி, டாக்டர் பிரபுரம் சவுத்ரி மற்றும் பிரதியும்னா சிங் தோமர் ஆகியோரும் கமல்நாத் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்ற கூற்றை நிராகரித்தனர்.
இதனிடையே சிந்தியா முகாமில் இருந்து வந்த அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களில் மோசடியாக கையெழுத்திட செய்யப்பட்டதாகவும், பெங்களூருவைச் சேர்ந்த (அரசாங்கத்துடன்) அவர்கள் தொடர்பில் இருந்ததாகவும் மாநில அரசு கூறியுள்ளது.
வீடியோ செய்தியில், சுகாதார அமைச்சர் துளசி சிலாவத் குறிப்பிடுகையில்., "22 எம்.எல்.ஏக்களும் ஒன்றுபட்டுள்ளனர், மற்றவர்களின் தூண்டுதலால் அல்ல, அவர்களின் சொந்தமான முடிவில் இதனை செய்துள்ளனர். நாங்கள் எங்கள் மிகவும் மதிப்பிற்குரிய ஜோதிராதித்யா சிந்தியாஜியுடன் இருக்கிறோம், அவரைப் பின்பற்றுகிறோம். அவருடைய முடிவு எங்களுக்கு மிக உயர்வான ஒன்று" என தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா தெரிவிக்கையில்., "ஜோதிராதித்யா சிந்தியா காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக காங்கிரசும் கமல் நாத்-ஜியும் அவரைக் காட்டிக் கொடுத்தனர். சிந்தியாஜி மேற்கொண்ட கடின உழைப்பால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. எனினும் அவர் மற்றும் அவரது மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். மேலும் சிந்த்வாரா தொகுதியில் (முதல்வர் கமல்நாத்தின்) ரூ.12,000 கோடி போடப்பட்டது. அப்படியென்றால் மற்ற எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பயனற்றவர்களா?" அவர் கேள்வி எழுப்பினார்.
பள்ளி கல்வி அமைச்சர் பிரபுராம் சவுத்ரி தெரிவிக்கையில்., "22 எம்.எல்.ஏக்களும் இன்று ஒன்றுபட்டுள்ளனர், வரும் நாட்களிலும் அப்படியே இருப்பார்கள். நாங்கள் எங்கள் தனி விருப்பத்துடன் ராஜினாமா செய்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் இமார்டி தேவி மற்றும் உணவு மற்றும் சிவில் வழங்கல் அமைச்சர் பிரதியும்னா சிங் தோமர் ஆகியோரும் இந்த வீடியோவில் சிந்தியாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை எதிரொலித்துள்ளனர்.
ஆறு அமைச்சர்கள் உட்பட பத்தொன்பது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தற்போது பெங்களூரில் உள்ளனர், மேலும் மூன்று பேர் மற்ற இடங்களில் உள்ளனர். கமல்நாத் அரசாங்கத்தை ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளி அவர்கள் அனைவரும் சிந்தியாவுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் இருந்து விலகியுள்ளனர்.
Unfortunate to see @JM_Scindia parting ways with @INCIndia. I wish things could have been resolved collaboratively within the party.
— Sachin Pilot (@SachinPilot) March 11, 2020
இதற்கிடையில், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், பாஜகவில் சேருவதற்கான சிந்தியாவின் நடவடிக்கை "துரதிர்ஷ்டவசமானது" என்று தெரிவித்துள்ளார். கட்சிக்கும் இருக்கும் பிரச்சனைகளை உள்கட்சில் விவாதிப்பதன் மூலம் தீர்க்கலாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிந்தியாவை தொடர்ந்து பைலட் பாஜக-விற்கு பயணம் எடுப்பார் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது பைலட் சிந்தியாவின் முடிவு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.