இந்தியா அரசியலமைப்பு சாசனம் என்றும் நமக்கெல்லாம் புனிதமான நூல்: மோடி!

நாட்டின் அரசியல் அமைப்பு சாசனம் எனும் புனித நூல் நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்வதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!!

Updated: Nov 26, 2019, 02:45 PM IST
இந்தியா அரசியலமைப்பு சாசனம் என்றும் நமக்கெல்லாம் புனிதமான நூல்: மோடி!

நாட்டின் அரசியல் அமைப்பு சாசனம் எனும் புனித நூல் நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்வதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!!

கடந்த 1949 ஆம் ஆண்டில் நவம்பர் 26 ஆம் நாளில் தான் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது அந்த நாளே நம் நாடு குடியரசானது. நம் நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் 1946 டிசம்பர் 9 ஆம் தேதி இந்திய அரசியமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் துவங்கியது. இதற்கான அரசியல் நிர்ணய சபை 296 உறுப்பினர்களுடன் இயங்கியது. முதலில் இந்த குழுவில் டாக்டர் அம்பேக்தர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது,  குடிமக்களின் உரிமைகள் மற்றும் அவர்களது கடமைகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுவது, இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சமாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதனை புனித நூலாகப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் 130 கோடி இந்தியர்களுக்கும், தாம் தலைவணங்குவதாக, பிரதமர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். நமக்கெல்லாம் அரசியலமைப்பு சாசனம், வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்வதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

இதனிடையே, இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், மராட்டிய அரசியல் விவகாரத்தை முன்னிறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சோனியா காந்தி தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். இந்தியா சுதந்திர அடைந்த 2 வாரத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது.

166 முறை சந்தித்து ஆலோசனை நடத்திய இக்குழுவினர், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கையால் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டு பிரதிகளை தாக்கல் செய்தனர். இந்த அரசியலமைப்புச் சட்ட வரைவு, 1949 நவம்பர் 26 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 70 ஆம் ஆண்டே தற்போது கொண்டாப்பட்டு வருகிறது.