நாடு முழுவதும் கனமழையால் பெருக்கெடுத்தும் ஓடும் வெள்ளம்... ஆறுகளாக மாறிய சாலைகள்

நாடு முழுவதும் கனமழையால் பெருக்கெடுத்தும் ஓடும் வெள்ளம்... ஆறுகளாக மாறிய சாலைகள். இமாச்சலில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, டெல்லி-பஞ்சாப்பில் கட்டிடங்கள் சேதம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 9, 2023, 07:40 PM IST
  • நாடு முழுவதும் கனமழை!
  • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  • சாலைகளில் பெருகியோடும் வெள்ளம்
நாடு முழுவதும் கனமழையால் பெருக்கெடுத்தும் ஓடும் வெள்ளம்... ஆறுகளாக மாறிய சாலைகள் title=

புதுடெல்லி: நாடு முழுவதும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் ஆறுகளாக மாறிவிட்டது. இமாச்சலில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, டெல்லி-பஞ்சாப்பில் கட்டிடங்கள் சேதம். மணலியில் உள்ள தாரா மில்லில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 3-ன் ஒரு பகுதி பியாஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
 
டெல்லி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்லி மற்றும் பஞ்சாபில் கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் 40 ஆண்டுகள் பழமையான பாலம் அடித்து செல்லப்பட்டது.

பாலம், தண்ணீரில் அடித்துச் செல்லும் வீடியோவும் வெளியாகி வைரல் ஆகிறது. குலுவில் அமைந்துள்ள பியாஸ் ஆற்றில் சிக்கியவர்களை NDRF குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மற்றவர்களை காப்பாற்றும் முயற்சிகள் தொடர்கின்றன.  

டெல்லி-என்.சி.ஆர் மற்றும் ஹரியானா-பஞ்சாப் ஆகிய இடங்களில் கனமழை காரணமாக பல சாலைகள் நீரில் மூழ்கின. பல பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. டெல்லியில் யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழகத்தில் தொடங்கிய பருவ மழை? தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்லி, நொய்டா மற்றும் குருகிராமில் பல முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சண்டிகரில் பெய்த கனமழையால், ஜிராக்பூரில் உள்ள குடியிருப்புப் பகுதி தண்ணீரில் மூழ்கியது. 

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் தொடர் மழையால் ஜீலம் நதியின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது. அப்பகுதி மக்கள் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

ரம்பானில் உள்ள பந்தியலில் T-5 சுரங்கப்பாதைக்கு அருகில் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்திற்காக மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | எல்லை தாண்டிய PUBG காதல்... இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்...!

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் 153 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, இது 1982ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்சமாக மழையாகும்.

இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் இடைவிடாத கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) கணித்துள்ளது.

திங்கள்கிழமை வரை ஜம்மு காஷ்மீரின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், கிழக்கு ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. IMD படி, ஜூலை 11 முதல் இப்பகுதியில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் படிக்க | நிலச்சரிவு காரணமாக 2வது நாளாக நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News