கோவிட் -19 தடுப்பு நடவடிக்கை எம்.பி.க்கள், அமைச்சர்களின் சம்பளத்தை 30% குறைப்பு

கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த நீண்ட போரில் அரசும், அதன் மக்களும் சோர்வடையவோ ஓய்வெடுக்கவோ முடியாது என்றார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 6, 2020, 04:26 PM IST
கோவிட் -19 தடுப்பு நடவடிக்கை எம்.பி.க்கள், அமைச்சர்களின் சம்பளத்தை 30% குறைப்பு title=

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை திங்களன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை ஒரு வருடத்திற்கு 30 சதவீதமாக  குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகை கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைக்கு நிதியாகப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறுகையில், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் மாநில ஆளுநர்களும் 30 சதவீத ஊதியத்தை குறைக்க முன்வந்துள்ளனர்.

இன்று பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த நீண்ட போரில் அரசும், அதன் மக்களும் சோர்வடையவோ ஓய்வெடுக்கவோ முடியாது என்றார்.

"கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு சரியான பாதையில் செல்கிறது என்பதற்கான இது ஒரு முக்கிய முடிவு" என்று ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Trending News