BIG NEWS: கொரோனா தடுப்பூசி சந்தை குறித்து ஹர்ஷ்வர்தன் கூறியது என்ன?

கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டால் முதலில் நானே போட்டுக்கொள்வேன் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Sep 14, 2020, 07:57 AM IST
BIG NEWS: கொரோனா தடுப்பூசி சந்தை குறித்து ஹர்ஷ்வர்தன் கூறியது என்ன? title=

கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டால் முதலில் நானே போட்டுக்கொள்வேன் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்!!

கொரோனா வைரஸுக்கு (Coronavirus) எதிரான தடுப்பூசி மார்ச் 2021-க்குள் தயாராகும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் கிருஷ்ணன் நாயர் தெரிவித்துள்ளதாக ஹர்ஷா வர்தன் (Union Minister of Health and Family Welfare Harsh Vardhan) கூறியுள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், "2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி (COVID-19 vaccine) தயாராக இருக்கும், ஆனால் இன்னும் தேதி நிர்ணயிக்கப்படவில்லை" என்றார். 

மேலும் அவர் கூறுகையில்... கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டால் அதை நிரூபிக்க நானே முதல் ‘டோஸ்’ தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவேன் என அவர் கூறினார். தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கென்று தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும் அது 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் (வரும் மார்ச் மாதத்துக்குள்) தயாராகி விடும்.

ALSO READ | அக்டோபருக்குள் இந்தியாவில் 7 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்பு ஏற்படும்: ஆய்வு

மூத்த குடிமக்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் பணிபுரிகிறவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை அவசரமாக வழங்க பரிசீலித்து வருகிறோம். ஒருமித்த முடிவு எட்டப்பட்ட பின்னர் இது செய்யப்படும். தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை பொறுத்தவரையில், அரசு முழு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இயற்கையான தொற்றுநோயுடன் ஒப்பிடும்போது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மிக விரைவாக ஏற்படுத்துவதற்கு பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசி உதவும். பாதுகாக்கப்பட்ட மருந்தை நோய் எதிர்ப்பு சக்தி பற்றி அடுத்த சில மாதங்களில் ஒருமித்த கருத்து உருவாகும் என்று நம்புகிறோம்.

நோய்த்தொற்றின் வளர்ச்சியடைந்த தன்மை மற்றும் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் உள்ள முறையான சுகாதார சிக்கல்கள் பற்றிய சான்றுகள் ஆகியவற்றை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் நீண்ட கால தாக்கத்தை ஆராய்ச்சி செய்யுமாறு எய்ம்ஸ் மற்றும் பிற ஆராய்ச்சி நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் குறித்த தேசிய மருத்துவ பதிவேட்டை உருவாக்குகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் சுவாச அமைப்பு, சிறுநீரக அமைப்பு, இதயம், இரைப்பை மற்றும் குடல் போன்றவற்றின் நிலை தொடர்பான சொந்த தரவுகளை உருவாக்குவதற்கு நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

Trending News