COVID Update: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3.62 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 4,120 இறப்புகள் பதிவாகியுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 13, 2021, 12:55 PM IST
  • கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் குறைந்துள்ளது
  • ஆகஸ்ட் மாதத்திற்குள் சீரம் நிறுவனம் 10 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும்
  • பாரத் பயோடெக் 7.8 கோடி டோஸ் வரை தடுப்பூசிகளை வழங்கும்
COVID Update: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3.62 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று title=

COVID Update: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 4,120 இறப்புகள் பதிவாகியுள்ளன. 

இதன் அடிப்படையில் பார்க்கும்போது, நம் நாட்டில் கடந்த ஆண்டில் இருந்து கொரோனா நோய்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 2,37,03,665 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் இந்த நோய்த்தொற்றுக்கு நம் நாட்டில் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு 2,58,317 ஆக பதிவாகியுள்ளது.

Also Read | Coimbatore ESI மருத்துவமனை டீன், செவிலியர் காலில் விழுந்தது ஏன்?  

தற்போது தொடர்ச்சியாக நான்காவது நாளாக இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் குறைவாக இருக்கிறது.

நாட்டில் தற்போது 37,10,525 பேருக்கு COVID-19 நோய் பாதிப்பு உள்ளது.  இதுவரை மொத்தம் 17,72,14,256 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று தொடர்பான சமீபத்திய செய்திகள் இவை:

1. இந்தியாவில் தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்ய, விரைவில் உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷாரில் கோவாக்சின் (Covaxin) உற்பத்தி தொடங்கவிருக்கிறது.  பாரத் இம்யூனோலாஜிகல்ஸ் அண்ட் பயோலாஜிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (Bharat Immunologicals and Biologicals Corporation Limited) இன் புலந்த்சர் ஆலையில் கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Also Read | செவிலியர்களுக்கு International Nurses Day வாழ்த்துக்கள்

2. சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் (Serum Institute and Bharat Biotech) ஆகிய நிறுவனங்கள் ஆகியவை அடுத்த நான்கு மாதங்களுக்கு தங்கள் உற்பத்தித் திட்டம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளன, ஆகஸ்ட் மாதத்திற்குள் சீரம் நிறுவனம் 10 கோடி மற்றும் பாரத் பயோடெக் 7.8 கோடி டோஸ் வரை தடுப்பூசிகளை வழங்குவதாக அந்த அறிக்கை கூறுவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3. மாநிலத்தில் கோவிட் சிகிச்சை தொடர்பான பொதுமக்களின் குறைகளை ஆராய ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று பேர் கொண்ட தொற்று பொது குறை தீர்க்கும் குழு (three-member Pandemic Public Grievance Committee (PPGC)) அமைக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

4. கோவிட் தடுப்பூசிகளின் பற்றாக்குறையினால் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை ‘தற்காலிகமாக நிறுத்தி வைக்க’ கர்நாடக அரசு முடிவு செய்தது.

Also Read | சென்னையில் இன்று பெட்ரோல் விலை என்ன? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News