பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்தக்கொள்பவர்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் சமூக விரோதிகள் அரங்கேற்றும் வன்முறை சம்பவங்களைத் தடுக்க சமூக ஆர்வலர் தெக்சீன் பூனவல்லா சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட் பசு பாதுகாப்புப்பின் பெயரால் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக விளக்கமளிக்க ஆறு மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதன் பின், கடந்த ஜூலை 21-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, பசு பாதுகாவலர்களை மத்திய மாநில அரசுகள் பாதுகாக்ககூடாது என எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. மாவட்டம் தோறும் மூத்த காவல்துறை அதிகாரிகளை பசு பாதுகாவலர்களின் கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.