டெல்லி மருத்துவமனையில் தலாய்லாமாவுக்கு மருத்துவ பரிசோதனை

தலாய் லாமாவுக்கு டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Last Updated : Apr 10, 2019, 09:18 AM IST
டெல்லி மருத்துவமனையில் தலாய்லாமாவுக்கு மருத்துவ பரிசோதனை title=

தலாய் லாமாவுக்கு டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமாவுக்கு (83) உடல் நலனில் சில கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச கற்றல் மாநாட்டில் தலாய் லாமா பங்கேற்றார். இந்த மாநாடு ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. அதன்பின்னர் கடந்த திங்கட்கிழமை தரம்சாலா சென்றார். அங்கு சென்றதும் உடல்நலனில் சில கோளாறுகள் ஏற்பட்டதையடுத்து, நேற்று மீண்டும் டெல்லி திரும்பினார் தலாய் லாமா.\

டெல்லியின் சாகேட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் தலாய் லாமாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Trending News