புதுடெல்லி: டெல்லி என்.சி.ஆரில் (Delhi-NCR) காற்று மாசுபாட்டின் அளவு ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இன்று தலைநகரின் பல பகுதிகளில் காற்று தரத்தின் அளவு 400 ஐத் தாண்டியுள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. குளிர் மற்றும் காற்றின் வேகம் குறைவதால் மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில், டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் (Noida) காற்றின் தரம் 573 ஐ எட்டியது. குருகிராம் பற்றி பேசும்போது, இங்குள்ள காற்றின் தரம் டெல்லி மற்றும் நொய்டாவை விட சிறப்பாக இருக்கிறது. இங்கே காற்றின் தரம் 379 அளவீடு என பதிவாகி உள்ளது. மூடுபனியின் விளைவால் இன்று டெல்லி முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்பட்டது.
டெல்லியில் மாசு அளவு கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு டெல்லி மற்றும் என்,சி.ஆர் பகுதிகளில் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, அண்டை மாநிலங்களின் வைக்கோல் எரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாகி வருகிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.