திருத்தப்பட்ட ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது: CBDT

2019-20 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான (2018-19 நிதி ஆண்டு) தாமதமான மற்றும் திருத்தப்பட்ட ITR-களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரி வாரியம் புதன்கிழமை நீட்டித்தது.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 30, 2020, 07:26 PM IST
  • வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139 (5) இன் கீழ் திருத்தப்பட்ட வருமான அறிக்கையை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம்.
  • திருத்தப்பட்ட ITR குறிப்பிட்ட கால எல்லைக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • செப்டம்பர் 29 வரை 6 மாதங்களில் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோருக்கு 1.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது: CBDT

புதுடெல்லி: கொரோனா வைரஸ் COVID-19 மற்றும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக 2019-20 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான (2018-19 நிதி ஆண்டு) தாமதமான மற்றும் திருத்தப்பட்ட ITR-களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) புதன்கிழமை நீட்டித்தது. செப்டம்பர் 30-ஆக இருந்த காலக்கெடு தற்போது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

"COVID-19 நிலைமை காரணமாக வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் உண்மையான சிரமங்களை கருத்தில் கொண்டு, CBDT, 2019-20 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான தாமதமான மற்றும் திருத்தப்பட்ட ITR-களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30-திலிருந்து நவம்பர் 30 வரை நீட்டிக்கிறது. Order u/s 119 (2a) வெளியிடப்பட்டது" என்று CBDT ட்வீட் செய்தது.

இதற்கிடையில், செப்டம்பர் 29 வரை 6 மாதங்களில் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோருக்கு 1.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தை ரீஃபண்டாக வழங்கியுள்ளதாக வருமான வரித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

2018-19 நிதியாண்டிற்கான அசல் மற்றும் திருத்தப்பட்ட வரி வருமானத்தை தாக்கல் செய்ய வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு வழங்கிய நான்காவது நீட்டிப்பு இது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக மார்ச் மாதத்தில், மத்திய அரசு இந்த காலக்கெடுவை மார்ச் 31-லிருந்து ஜூன் 30 –ஆக நீட்டித்தது. பின்னர் ஜூன் மாதத்தில், தேதி மீண்டும் ஜூலை 31 வரை ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

ALSO READ: ITR, வருமான வரி தாக்கல் சிக்கலின்றி செய்ய தேவையான 5 ஆவணங்கள்..!!!

திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையை (ITR) யார் தாக்கல் செய்ய வேண்டும்?

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139 (5) இன் கீழ் திருத்தப்பட்ட வருமானத்தை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம். வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தகவல்கள் விடுபட்டிருந்தாலோ, அவர் / அவள் திருத்தப்பட்ட ITR-ஐ தாக்கல் செய்யலாம். பெயர் எழுத்துப்பிழை, வங்கி கணக்கு எண் போன்றவற்றில் ஏற்படும் தவறுகள் இதில் அடங்கும். திருத்தப்பட்ட ITR (Revised ITR) குறிப்பிட்ட கால எல்லைக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையை எவ்வாறு தாக்கல் செய்வது?

வருமான வரி விதிகளின்படி, ITR பயன்பாட்டில், ‘Revised return under section 139(5)’ என்று ‘பிரிவை’ தேர்ந்தெடுத்து ‘Filing Type’-ஐ ‘Revised’ என்று தேர்ந்த்டுக்கவும். முதலில் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையின் ‘Acknowledgement Number’ மற்றும் ‘Date of filing’ ஆகியவற்றை உள்ளிடவும். திருத்தப்பட்ட ITR-ஐ வருமானத்தை ஆன்லைனில் தாக்கல் செய்யும் போது 15 இலக்க ஒப்புதல் எண்ணை (Acknowledgement Number) உள்ளிடுவதை IT துறை கட்டாயமாக்கியுள்ளது.

ALSO READ: அவகாசம் உள்ளது என அலட்சியம் கூடாது, வருமான வரி தாக்கல் தாமதம் பல இழப்புகளை ஏற்படுத்தும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News