Defence Expo 2020 ஆனது வரும் பிப்ரவரி மாதம் உத்திரபிரதேசத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றி, 'Defence Expo-2020' பிப்ரவரி மாதத்தில் லக்னோவில் நடைபெறும் என்று அறிவித்தனர்.
மாநாட்டிற்கு முன்னர், யோகி ஆதித்யநாத், 'Defence Expo-2020' தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதித்யநாத் இதுகுறித்து கூறுகையில், பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்மூலம் உத்தரபிரதேசம் இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் விண்வெளி உற்பத்திக்கான இடமாக மாறும் என்று நான் நம்புகிறேன்." என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து அவரது சாதனைகள் குறித்து ஆதித்நாத் பேசுகையில், ''உத்தரபிரதேசத்தில், நாங்கள் சவால்களை வாய்ப்புகளாக மாற்றியுள்ளோம். லக்னோவில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு, வாரணாசியில் NRI மாநாடு மற்றும் பிரயாகராஜில் கும்பம் ஆகியவற்றை வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளோம்.'' என்று குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில்., ''இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்வுகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.'' எனவும் பெருமை தெரிவித்தார்.
'Defence Expo-2020'-க்கு உத்தரபிரதேசத்தை தேர்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு ஆதித்யநாத் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், 'Defence Expo-2020' ஒரு முக்கியமான சர்வதேச அளவிலான எக்ஸ்போ ஆகும். உத்திரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெறவிருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய எக்ஸ்போ இதுவாகும். பல முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். ஏராளமான முதலீட்டாளர்கள் வருகிறார்கள், அவர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர்கள் காண்பார்கள். '' என குறிப்பிட்டுள்ளார்.
'Defence Expo-2020'-ன் கருப்பொருள் 'இந்தியா: வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையம்' மற்றும் 'பாதுகாப்பு டிஜிட்டல் உருமாற்றம்' என்பதில் கவனம் செலுத்தும்.
மூத்த வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் Business-to-Business (B2B) தொடர்புகளில் ஈடுபட இந்திய நிறுவனங்களுக்கு Defence Expo ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது. இது அரசாங்கத்திற்கு அரசு (G2G) கூட்டங்களுக்கும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உதவுகிறது.