டெல்லியில் ஜூன் 7 வரை பகுதி நேர ஊரடங்கு அறிவிப்பு!

டெல்லி அரசாங்கம் உற்பத்தி மற்றும் கட்டுமான வணிகங்களை நிபந்தனைகளுடன் மீண்டும் தொடங்க அனுமதித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 30, 2021, 01:44 PM IST
  • டெல்லியில் ஜூன் 7ம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கு அமல்
  • டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது
டெல்லியில் ஜூன் 7 வரை பகுதி நேர ஊரடங்கு அறிவிப்பு! title=

டெல்லியில் ஜூன் 7ம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளார்.

திங்கள்கிழமை முதல் டெல்லியில் (Delhi) அன்லாக் முறை தொடங்கும். இருப்பினும், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) கொரோனா ஊரடங்கு உத்தரவு ஜூன் 7 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்படும். இந்த நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். 

ALSO READ | Oxygen பற்றாக்குறையால் இறந்த Corona நோயாளிகள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: டெல்லி அரசு

திங்கள்கிழமை (மே 31) முதல் உற்பத்தி மற்றும் கட்டுமான வணிகங்களை தொடங்கலாம் என்று டெல்லி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த இரண்டு நடவடிக்கைகளுடனும் தொடர்புடைய நபர்கள் இ-பாஸ் எடுக்க வேண்டும் மற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அவர்களின் முதலாளி, ஒப்பந்தக்காரர், உரிமையாளர்கள் இ-பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

டெல்லியில், 2 மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, மார்ச் 22 அன்று 888 தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொரோனா தொற்று விகிதம் 1.53 விழுக்காடாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,072 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News