டெல்லியில் ப்ளூ லைன் மெட்ரோ வழித்தடத்தில் ஒருவர் குதித்ததால் மெட்ரோ இயக்கம் தற்காலிகமாக பாதித்துள்ளது....
டெல்லி: டெல்லி முதல் நொய்டா சிட்டி சென்டர் வரையில் இயங்கி வரும் செயல்பட்டு வரும் ப்ளூ லைன் மெட்ரோ வழித்தடத்தில் இன்று காலை பெண் ஒருவர் வழித்தடத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததால் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை ராஜீவ் சௌக்கில் இருந்து நொய்டா சிட்டி சென்டருக்கு சென்று சென்றுள்ளது ப்ளூ லைன் மெட்ரோ ரயில். அப்போது திடீர் என பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதற்காக முயன்று மெட்ரோ ரயிலின் வழித்தடத்தில் குதித்துள்ளார். இதையடுத்து, மெட்ரோ சேவை சில மணிநேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பெண் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.
இது குறித்து ANI செய்தி நிறுவனம் தகவலின் படி, பெண் ஒருவர் தனது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்வதற்காக மெட்ரோ வழித்தடத்தில் குதித்துள்ளார். இதையடுத்து, அவரை அருகில் இருந்த மருத்துவ மனைக்கு சிகிச்சைகாக அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ப்ளூ லைன் மெட்ரோ சேவை சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.
இது போன்று கடந்த ஆண்டு செப்டம்பரில் சத்ரபூரில் ஒரு மெட்ரோ ரெயில் முன் 23 வயதான மனிதன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இறந்தவர்களில் 23 வயது மயூர் ஷர்மா என்பவர் அடையாளம் காணப்பட்டார். இவர் ஜங்புரா நிலையத்தில் தடங்கள் மீது குதித்தார்.