டெல்லியில் ஜனக்புரி மேற்கு- கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடம் (Meganta Line) வரும் மே 28-ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
ஜனக்புரி மேற்கு மற்றும் கால்காஜி மந்திர் இடையேயான 24.82 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, புதிய மெட்ரோ வழித்தடம் திறக்கப்படவுள்ளது. அதன் பிறகு, இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை மே 29-ம் தேதி காலை 6 மணி முதல் தொடங்கும்.
இந்நிலையில் 3ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை மே 29-ம் தேதி காலை 6 மணி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையிலான மெட்ரோ வழித்தடத்தில்:-
Pic courtsey: Wikipedia
* ஜனக்புரி மேற்கு |
* டாப்ரி மோர் |
* தசரத்புரி |
* பாலம் |
* சதர் பஜார் |
* டெர்மினல் 1 - IGI ஏர்போர்ட் |
* சங்கர் விஹார் |
* வசந்த் விஹார் |
* முனிர்கா |
* ஆர்.கே. புரம் |
* ஐஐடி டெல்லி |
* ஹோஸ் காஸ் |
* பஞ்ச்சீல் பார்க் |
* சிராக் தில்லி |
* கிரேட்டர் கைலாஷ் |
*நேரு என்கிளேவ் |
* கால்காஜி மந்திர் |