டெல்லி: இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஜம்மு காஷ்மீர் (ISJK) அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.
டெல்லி காவல்துறைக்கு இஸ்லாமிக் ஸ்டேட் ஜம்மு & காஷ்மீர் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து டெல்லி சிறப்புப் பிரிவு போலசார் பிரதான நடவடிக்கையை மேற்கொண்டார். அப்பொழுது சந்தேகிக்க வைத்த இரண்டு நபர்களை கைது செய்து விசாரித்ததில், அவர்கள் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஜம்மு காஷ்மீர் (ஐ.எஸ்.ஜே.கே) அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
Special Cell of Delhi police arrested two terrorists near Red Fort today. More details awaited.
— ANI (@ANI) September 7, 2018
நேற்று (வியாழக்கிழமை) இரவு இந்த இரண்டு பேரையும் டெல்லி போலீசார் கைது செய்யப்பட்டதாக பி.டி.ஐ. செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஜம்மு & காஷ்மீர் அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் நேற்று நள்ளிரவில் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகில் கைது செய்யப்பட்டது என மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
Delhi Police Special Cell arrested 2 terrorists last night from Jama Masjid bus stop near Red Fort.2 pistols,10 cartridges&4 mobile phones seized from them.They had acquired weapons from UP&were going to Kashmir. Weapons were to be used for terrorist activities: DCP(Special Cell) pic.twitter.com/aaKbv6LwDb
— ANI (@ANI) September 7, 2018
புலனாய்வு அமைப்பு உளவுத்துறை தகவலை அளித்த தகவலின்படி இருவரும் கைது செய்யப்பட்துள்ளனர்.