புதுடெல்லி: ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி பொதுமக்களிடம் நீங்கள் இந்த மாற்றத்துக்கு ஆதரிக்கிறீர்களா என்று நேரடியாக பதில் கேட்கிறார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் விதமாக பிரதமர் மோடி ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றார். டிசம்பர் 31 வரையில் கால அவகாசம் வழங்கினார். இந்த அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் மக்கள் வங்கிகளில் அலை மோதினர். நீண்ட வரிசையில் நின்று தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்கின்றனர்.
பிரதமர் மோடி நேரடியாக மக்களையை தொடர்பு கொள்ள முன்வந்து தனது டிவிட்டார் பக்கத்தில் கேள்வி எழிப்பயுள்ளர். மத்திய அரசின் நடவடிக்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்வியுடன் மக்களிடம் நேரடியாக பதில் கோரியுள்ளார் பிரதமர் மோடி.
மக்கள் தங்களுடைய கருத்தை தெரிவிப்பதற்கு பிரதமர் மோடி "என்எம்" என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளார். உங்களுடைய முதல் தகவலை தெரிந்துக் கொள்ள விரும்புகின்றேன் என்று பிரதமர் மோடி ஆப்பையும் தொடர்பையும் இணைத்துள்ளார் டிவிட்டரில்.http://www.narendramodi.in/downloadapp
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டு செல்லாது என்பது தொடர்பான அறிவிப்பு தொடர்பாக சில கேள்விகள் அதில் கேட்கப்பட்டுள்ளது:-
* இந்தியாவில் கருப்பு பணம் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
* ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற வேண்டுமா? வேண்டாமா?
* 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை என்ற மோடி அரசின் நடவடிக்கை குறித்து உங்களுடைய கருத்து?
* மோடியிடம் பகிர்ந்துக் கொள்ள உங்களிடம் ஏதாவது கருத்துக்கள், ஐடியாக்கள் மற்றும் உள்ளார்ந்த பார்வை உள்ளதா?
*இச்செயலின் மூலம் ஊழல், கருப்பு பணம், பயங்கரவாதம், கள்ள நோட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் மனதளவில் உங்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டதா?
என்ற கேள்விகளுடன் பிரதமர் மோடி சர்வேயை தொடங்கியுள்ளார்.
உங்களுக்கு சம்மதமா? பேசுவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு!
நமோ ஆப்யில் இந்த கணக்கெடுப்பு உள்ளது. உங்களுடைய கருத்தை பதிவுசெய்ய இந்த ஆப்யை பதிவிறக்கம் செய்யுங்கள். பிரதமர் உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.