புதுடெல்லி: அரசாங்கம் மற்றும் தேசிய நலத்திர்காகவே 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் கைவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த பொருளாதார தொகுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. நாட்டு நலனுக்காக அரசு இந்த துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது. ரூபாய் நோட்டு மாற்றுவது மிக முக்கியமான நடவடிக்கை. அரசின் முடிவு எடுக்கும் ஆற்றலை நிலைநிறுத்துவது சவாலானது வங்கிகளில் சிறிய அளவில் டெபாசிட் செய்பவர்களுக்கு பாதிப்பு இருக்காது என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
மேலும் அதிகளவில் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் தான் கவலைப்பட வேண்டும். சில நாட்களுக்கு சிறிய தொகை செலவிடுபவர்களுக்கு பிரச்னைகள் இருக்கலாம். போதிய அவகாசம் இருப்பதால் மக்கள் கவலைப்பட தேவையில்லை. பணத்தை மாற்றிக்கொள்ள வார இறுதி நாட்களிலும் வங்கி திறந்திருக்கும். புதிய ரூபாய் நோட்டுகள் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறோம். பழைய நோட்டுகளை விரைவாக மாற்றித்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனக்கூறினார்.